வணக்கம் நண்பர்களே!
நேற்றைய காலை பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் என்னிடம் போன் மற்றும் மெயில் செய்து எப்படி சார் பெண்களிடம் இருந்து சக்தியை எடுப்பது என்று கேட்டார்கள்.
நான் கொஞ்சம் சொல்லுவேன் நீங்கள் தான் அதனை பிடித்துக்கொண்டு நீங்கள் வெளியில் தேடி அறிந்துக்கொள்ளவேண்டும். அதனைவிட்டு விட்டு என்னிடமே வந்த நீங்கள் தானே சொன்னீர்கள் அதனால் எனக்கு கற்றுக்கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.
ஒரு கோடு ஒன்றை போடுவேன் அதனை வைத்து நீங்கள் ரோடு போட்டுக்கொள்ளுங்கள்.ஒன்றை தேடிபோகின்றீர்கள் அந்த தேடுதலில் கண்டிப்பாக இருக்கிறது என்று நான் சொல்லிவிட்டால் உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு தேடிச்செல்வீர்கள். கண்டிப்பாக இது இருக்கிறது அவர் சொல்லிருக்கிறார். நாம் தேடுவோம் கண்டிப்பாக கிடைக்கும் என்று உங்களின் தேடுதல் இருக்கும்.
அவநம்பிக்கையில் தேடிக்கொண்டிருக்கும்பொழுது உங்களின் வேகம் குறையும். அதனால் நான் இது இருக்கிறது என்று சொல்லிவிடுவேன். நீங்கள் அதனை பிடித்துக்கொண்டு தேடி அதனை அடைந்துக்கொள்ளுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment