வணக்கம் நண்பர்களே!
ஐயா வணக்கம்,
ஒரு சந்தேகம். ஒன்றுக்கும் மேற்பட்ட ஒரே கடவுள்(பல பெருமாள் படம்,பல முருகன் படம்...) படத்தினை வைத்து பூஜை அறையில் வழி படலாமா?. ஆண் ,பெண் கடவுள் படத்தினை ஒன்றாக வைத்து பூஜை அறையில் வழி படலாமா?
நன்றி ஐயா.
அ.செல்வக் குமார்.
இன்றைக்கு நாம் கோவிலுக்கு சென்றால் அந்தந்த கோவிலின் படத்தினை வாங்கி வந்து விடுகிறோம். அதனை கொஞ்ச நாள் நமது பூஜையறையில் வைத்து வணங்குகிறோம். அது பழைய படமாக சென்றவுடன் அதனை தூக்கி போட்டுவிடுகிறோம்.
நீங்கள் உங்களின் விருப்பத்திற்க்கு தகுந்தவாறு வாங்கி பூஜையறையில் வைத்துக்கொள்ளலாம். ஒன்றும் தவறு கிடையாது. நாம் பார்க்கும் விசயம் நம்மை பாதிக்க செய்யும். மனதின் இயல்பு. நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்துவிட்டு பிறகு தெய்வங்களின் போட்டோவை வாங்கி வைத்துக்கொள்ளலாம்.
உதாரணமாக ராஜா வேடத்தில் முருகன் இருக்கிறார் என்றால் அவரை பார்த்தவுடன் நீங்கள் ராஜாவாக வாழவேண்டும் என்று நினைப்பீர்கள். அதே நேரத்தில் ஆண்டி கோலத்தில் முருகன் இருந்தால் அவரை பார்த்தவுடன் நீங்கள் ஞானத்தை தேடி ஓடிவிடுவீர்கள்.
பெருமாள் அம்மன் மற்றும் முருகன் போட்டோ வைத்து வணங்கலாம் ஆனால் உங்களின் குலதெய்வத்தின் படத்தை வைத்து வணங்கினால் மிகவும் நல்லது. படம் கூட தேவையில்லை ஒரு விளக்கை ஏற்றி வணங்கினால் கூட போதும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
2 comments:
Sri ramar padam mana nimmadhikku valipadalaama?
வணக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் வணங்கலாம்
Post a Comment