வணக்கம் நண்பர்களே!
நாம் என்ன தான் ஆன்மீக பதிவுகள் சோதிடபதிவுகள் எழுதினாலும் ஆண்கள் மட்டும் படிக்கவும் பதிவு நண்பர்களிடம் பிரபலமாகுவது போல் பிற பதிவுகள் பிரபலமாகுவது கிடையாது. எனக்கு போன் செய்யும் நண்பர்கள் கூட இதனைப்பற்றி நிறைய எழுதுங்கள் என்று சொல்லுவார்கள். அவர்களின் விருப்பத்திற்க்காக இந்த பதிவு.
பொதுவாக ஆண்கள் பெண் பார்க்கும்பொழுது அதாவது திருமணத்திற்க்கு பெண் பார்க்கும்பொழுது தன்னை விட வயது குறைந்தவர்களை பார்த்து திருமணம் செய்வார்கள். இது நடைமுறையில் இருக்கும் வழக்கம். இப்படி திருமணம் நடக்கும்பொழுது இருவருக்கும் புரிதல் இல்லாமல் அடிக்கடி சண்டை நடக்கும்.
பையன் ஒன்று சொன்னால் அந்த பெண் ஒன்று சொல்லிக்கொண்டு கோபப்பட்டுக்கொண்டு செல்லும். இது புரிதல் இல்லாமல் நடக்கும் சண்டையாகவே இருக்கும்.
ஒரு பையன் திருமணம் செய்யும்பொழுது தன்னை விட வயது முதிர்ந்த அதாவது இரண்டு வயதிற்க்கு மேல் உள்ள பெண்ணை பார்த்து திருமணம் செய்தால் அவர்களின் திருமண வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்றுக்கொண்டிருக்கும்.
எப்பொழுதும் இளம்பெண்களாக இருந்தால் அவர்களின் புரிதல் வித்தியாசப்படும். உங்களை விட அதிக வயது பெண்களாக இருந்தால் அனைத்து விசயத்திலும் உங்களுக்கு அவர்கள் அறிவுரை சொல்லுவார்கள். மிகப்பெரிய வெற்றி பெற்றவர்களை பார்த்தால் அவர்களின் வயதை விட அதிக வயது உள்ள பெண்ணை திருமணம் செய்து இருப்பார்கள்.
அனைத்து கருத்துக்களும் இந்த கருத்துக்கு எதிர்கருத்து சொன்னாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். விலங்கினங்கள் உறவுக்கொள்ளும் பொழுது வயதை பார்த்து உறவுக்கொள்வதில்லை. அந்த அடிப்படையில் நான் இதனை சொல்லியுள்ளேன். உங்களால் முடிந்தால் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
1 comment:
Ithukku naan oththukka matten.
Post a Comment