Followers

Wednesday, August 20, 2014

இரகசியபள்ளி


வணக்கம் நண்பர்களே!
                    இன்றைய காலத்தில் ஆன்மீகத்தை அனுபவங்களாக எழுதுபவர்கள் குறைவு. அனைவரும் புத்தகத்தை பார்த்த அப்படியே பதிவுகளில் எழுதுகிறார்கள். இப்படி எழுதுவதால் நம்ம மதத்தின் தன்மை தான் குறையுமே தவிர நம் மதத்தைப்பற்றி சரியான புரிதல் இல்லாமல் போய்விடும்.

இந்த காலத்திற்க்கு தகுந்தவாறு நமது அனுபவங்களை எழுதவேண்டும். பொதுவாக ஆன்மீகம் என்பது புத்தகத்தில் படிக்ககூடிய விசயம் கிடையாது. ஆன்மீகத்தை அனுபவத்தில் பெற்றால் மட்டுமே சாத்தியம். 

ஒருவன் நிச்சயமாக ஞானத்தை அடையவேண்டும் என்ற தாகத்தோடு இருந்தால் அவனுக்கு கண்டிப்பாக ஒரு குரு கிடைப்பார். அந்த குரு பல இரகசியங்களை அவனுக்கு கொடுப்பார். இப்படிப்பட்ட ரகசியப்படிப்பை படிப்பதற்க்கு தான் ரகசியபள்ளி என்ற ஒன்று நம் நாட்டில் இருக்கிறது. இதனைப்பற்றி வெளியில் தெரியாது ஆனால் ஒரு குருவை நாடும்பொழுது இந்த பள்ளிப்படிப்பை பற்றி சொல்லுவார்கள்.

ஒருவர் இந்த பள்ளியில் படித்தால் போதும் அவர்க்கு அனைத்து விசங்களையும் கற்றுக்கொடுத்துவிடுவார்கள். இந்த பள்ளி யாருக்கும் தெரியாமல் இயங்குவதால் இதற்கு இரகசியபள்ளி(mystery school) என்று பெயர். உங்களால் முடிந்தால் இதனை தேடி நீங்கள் படித்து பயன்பெறலாம்.

நண்பர்களே முகநூல் (FaceBook) அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பர்கள் யாராவது இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்ஒரு உதவி தேவைப்படுகிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: