வணக்கம் நண்பர்களே!
ஒரு கேள்வி கேட்டுருந்தேன். இந்த கேள்விக்கு ஒருவர் மட்டும் எனக்கு பதில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்கு நன்றி.
துருவகணிதத்தை பயன்படுத்தி செய்யலாம் என்று சொன்னார். இது ஜாதகர்களை ஏமாற்றும் ஒரு யுக்தி. ஒருவருக்கு எத்தனை குழந்தைகள் இருக்கின்றன என்பதை அவர்கள் ஒரு குறியீடு வழியாக ஜாதகத்தில் எழுதி வைத்துவிடுவார்கள்.
இதனை சோதிடம் பார்ப்பவர்கள் அறிந்துக்கொண்டு உங்களுக்கு ஆண் குழந்தை இத்தனை பெண் குழந்தை இத்தனை இருக்கின்றன என்று சொன்னவுடன் ஜாதகம் பார்க்க வந்தவர்கள் சோதிடரின் திறமையை பாராட்டுவார்கள். நவீன காலத்தில் கம்யூட்டர் ஜாதகம் வந்ததில் இருந்து இதனை சொல்லமுடியாது.
கம்யூட்டர் ஜாதகத்தில் குறியீடுகள் இருக்காது. இந்த காலத்தில் சோதிடம் பார்ப்பவர்கள் இதனை எல்லாம் கேட்பதும் இல்லை. சோதிடர்களிடம் வந்து அவர்களின் பிரச்சினையை சொல்லிவிட்டு அதற்கு வழியை சொல்லுங்கள் என்று மட்டும் கேட்கிறார்கள்.
சோதிடர்களிடம் அவ்வளவு ஒற்றுமை அந்த காலத்தில் உண்டு. இந்த காலத்தில் கிடையாது என்று தான் சொல்லவேண்டும். இப்பொழுது அனைவரும் சோதிடம் பார்க்க தெரிந்துக்கொண்டதால் இதனைப்பற்றி யாரும் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment