வணக்கம் நண்பர்களே!
குலதெய்வத்தைப்பற்றி ஒரு கருத்தை பார்க்கலாம். இப்பொழுது பல பேர் குலதெய்வ வழிப்பாட்டை செய்து வருகிறார்கள். அவர்களை பாராட்டவேண்டும்.
ஒரு சில குடும்பங்களில் ஏதாவது ஒரு இறப்பு நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் ஆறு மாதத்திற்க்கு அல்லது ஒரு வருடத்திற்க்கு குலதெய்வ வழிபாட்டை நடத்தாமல் இருக்கிறார்கள். இது தவறான ஒன்று.
எந்த ஒரு துக்கம் அல்லது தீட்டு போன்ற நிகழ்வுகளை அதிக காலம் வைத்துக்கொள்ள கூடாது. முப்பது நாட்கள் சென்றால் போதும் அதன் பிறகு நீங்கள் வழிபாட்டை பின்பற்றலாம்.
குலதெய்வம் என்பது உங்களின் வீட்டில் உள்ள ஒரு நபர் போல் தான். அதுவும் உங்களோடு தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது என்ற நினைப்பை நீங்கள் வைத்து அதற்கு செய்யவேண்டியதை நீங்கள் செய்துக்கொண்டு வரவேண்டும்.
உங்களின் குலதெய்வத்திற்க்கு இது எல்லாம் தீட்டாகவே எடுத்துக்கொள்ளாது. நமது அம்மனையே எடுத்துக்கொள்ளுங்கள். இறப்பு நடந்தால் கூட அம்மன் கோவிலில் பூஜை நடந்துக்கொண்டே இருக்கும். அதற்கு காரணம் நம்மையும் அதனையும் பிரித்து வைத்து பார்ப்பது கிடையாது. நீங்கள் தீட்டு என்று பிரித்தவைத்தால் அது உங்களை விட்டு போய்விடும்.
உங்களின் ஊரில் இப்படி எல்லாம் நடந்தால் அதனை நீங்கள் மாற்றி வைத்துக்கொள்வது நல்லது. அவர்களிடம் நீங்கள் எடுத்துச்சொல்லி புரிய வையுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment