Followers

Wednesday, August 13, 2014

2000 பதிவு : மனமார்ந்த நன்றி


வணக்கம் நண்பர்களே!
                    இது நமது ஜாதககதம்பத்தின் 2000 பதிவு. சின்ன பதிவுகளாக எழுதி இப்பொழுது தான் என்னால் இரண்டாயிரம் பதிவை தொட்டு இருக்கிறேன். அம்மனின் அருளால் இது நடந்து இருக்கிறது என்று சொல்லவேண்டும்.

ஆன்மீகத்தில் மிக சிறந்த முறையில் எனக்கு அறிவுரை வழங்கி என்னை உருவாக்கிய குருவின் பாதம் சரணம்.

ஜாதககதம்பத்தை நாடி வரும் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. பிறருக்கு ஜாதககதம்பத்தை அறிமுகம் செய்து வைத்து இதனை படியுங்கள் என்று சொன்ன உங்களுக்கு நிறைய கடன்பட்டு இருக்கிறேன் என்று தான் சொல்லவேண்டும். இத்தனை பேர்கள் படிப்பதற்க்கு நீங்கள் மட்டுமே காரணமாக இருக்கமுடியும். 

சோதிடபதிவு ஒரு நாளைக்கு ஒரு பதிவாது நமது தளத்தில் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். அதிகமான பதிவு ஆன்மீகம் சார்ந்ததாகவே இருக்கும். சோதிடத்தை மட்டும் எழுதிக்கொண்டு இருந்தால் அதற்கு வழியை யார் சொல்லுவது என்று பார்த்து இதனை அதிகமாக எழுதுக்கிறேன். 

பதிவுலக நண்பர்களுக்கும் நன்றி. ஜாதககதம்பத்தைப்பற்றி அவர்களின் பதிவு வழியாக நிறைய பேருக்கு சொல்லிருக்கிறார்கள். ஜாதககதம்பத்தை பற்றி வெளியிடம் அனைத்து தளங்களுக்கும் மிக்க நன்றி. நான் பதில் அளிக்கவில்லை என்றாலும் எனக்கு கேள்வி மற்றும் பாராட்டி பின்னோட்டம் இடும் நண்பர் நல்லூர் பரமேஸ் அவர்களுக்கு நன்றி. 

நண்பர் கிருஷ்ணப்ப சரவணனுக்கு நன்றி சொல்லவேண்டும். அவர் செய்கின்ற உதவியை வெளியில் சொல்லமுடியாது. நிறைய பதிவுகளை தருவதற்க்கு அவர் காரணமாக இருக்கிறார் என்று மட்டுமே சொல்லமுடியும்.

ஜாதககதம்பத்தை தொடர்ந்து படியுங்கள். படிப்பது மட்டும் இல்லாமல் உங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள். படிப்பது மட்டும் இருந்தால் பொழுதுபோக்காக சென்றுவிடும். உங்களுக்குள் இதனை சோதனை செய்து பார்க்கும்பொழுது மட்டுமே உங்களை உயர்த்திக்கொள்ளமுடியும். என்னால் முடிந்தளவுக்கு எழுதுக்கிறேன். அதனை வாங்கிக்கொண்டு உங்களை சோதனை செய்துவிட்டு பிறகு ஏற்றுக்கொள்ளுங்கள்.

மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நன்றி

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

7 comments:

ATOMYOGI said...

வாழ்த்துகள்! தமது பணி மேலும் தொடர இறை அருள் புரிவதாக‌!!!!!

nallur parames said...

2000maavadhu padhivil en peyarum pottuviteerkal sir mika mika nanri.enaiyaalum eesan ungalukku epothum thunai iruppan.

prakash m said...

MANAMARNTHA VALTHUKAL SIR.................................................................

md said...

congratulations sir.- Harish

Kalairajan said...

வாழ்த்துகள் அய்யா பதிவுகள் தொடரட்டும்

இராஜராஜேஸ்வரி said...

ஜாதககதம்பத்தின் 2000 பதிவுக்கு
இனிய நல்வாழ்த்துகள்.!

Kalairajan said...

வாழ்த்துக்கள் அய்யா, பதிவுகள் பன்மடங்காக வளரட்டும்.