வணக்கம் நண்பர்களே!
மேலே உள்ள ஜாதகத்தை பாருங்கள். இவரின் லக்கினம் ரிஷபம். லக்கினாதிபதி சுக்கிரன் மூன்றாவது வீட்டில் அமர்ந்து இருக்கிறார். இவரின் ராசி சிம்மம். இவருக்கு ராகு தசா ஆரம்பித்தது.
இவருக்கு ராகு தசா ஆரம்பித்த காலத்தில் இருந்து இவருக்கு வியாபாரத்தில் சரிவு ஏற்பட்டது. நன்றாக சென்றுக்கொண்டிருந்த தொழில் ராகு தசாவில் பெரிய அளவில் சரிவை சந்தித்து. இவருக்கு ராகு பத்தாவது வீட்டில் இருக்கிறது. ராகு கிரகம் சனிக்கிரகத்தின் வீட்டில் இருக்கிறது.
சனிக்கிரகம் நீசமாகி விரையவீட்டில் இருக்கிறது.எந்த கிரகம் நீசமானாலும் சனிக்கிரகம் மட்டும் நீசமாககூடாது. சனிக்கிரகம் நீசமாகிவிட்டால் பெரிய பிரச்சினை தந்துவிடும். கோச்சாரபடி நீசமானால் கூட அனைவருக்கும் பிரச்சினை ஏற்படும்.
ராகு சனியின் வீட்டில் இருந்ததால் ராகு சனியைப்போல் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. சனி ஒன்பதாம் மற்றும் பத்தாவது வீட்டிற்க்கு சொந்தக்காரனாக இருந்தாலும் அவர் சென்று அமர்ந்த வீடு விரைய வீடாக இருந்ததால் அவரால் முழு பலனையும் தரமுடியவில்லை.
தொழிலில் சரிவை தந்தோடு இல்லாமல் அவரை தொழிலில் இருந்து கொஞ்ச காலத்தில் வெளியே செல்ல வைத்தது.ஏற்கனவே நாம் ராகு தசாவைப்பற்றி பார்த்து இருக்கிறோம். ராகுவின் தசாவும் மிகப்பெரிய அளவில் பிரச்சினையை தரும் என்றாலும் சனியின் நிலை தான் இவரை கீழே தள்ளியது என்று முடிவு எடுத்து சனிக்கிரகத்திற்க்கு தகுந்த பரிகாரம் செய்தேன். ஒரளவு தற்பொழுது முன்னேறி வருகிறார்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
2 comments:
அப்பொழுது அவரின் உடல்நிலைக்கு பாதிப்பு ஏற்படுத்தவில்லையா?...
வணக்கம் நண்பரே சிறிய பிரச்சினை மட்டும் வந்தது அதுவும் மனரீதியான பிரச்சினை தானே தவிர வேறு ஒன்றும் வரவில்லை. நன்றி
Post a Comment