வணக்கம் நண்பர்களே!
ஒரு சிலரின் கார்களை பார்த்தாலே அவர் மனைவிக்கு கொடுக்கும் மரியாதை என்ன என்று புரிந்துக்கொள்ளமுடியும். என்ன பா இது புது கதையாக இருக்கின்றதே என்று நினைக்கின்றீர்களா ஆமாம் உண்மை தான்.
ஒருவர் கார் அல்லது பைக்கை சுத்தமாக வைத்திருந்தாலே அவர் அவரின் மனைவியை மிகவும் நேசிக்கிறார் என்று அர்த்தம். இது எப்படி ஆன்மீகத்திற்க்குள் வரும் என்று கேட்கிறீர்களாக
கார் மற்றும் பைக் எல்லாம் சக்தியில் தான் இயங்குகிறது. அந்த சக்தியை நேசிக்கும் ஒருவன் அவனின் மனைவியை கண்டிப்பாக நேசிப்பான். கார் அல்லது பைக் சுத்தமாக இல்லை என்றால் அவரின் மனைவியை அவர் நேசிக்கவில்லை என்று தான் அர்த்தம்.
பல பேர் இன்று மனைவியிடம் அடிவாங்க போகிறார்கள். இதனை படிக்கும் தாய்குலங்கள் கண்டிப்பாக புரிந்துக்கொள்வார்கள். அடிவாங்கினாலும் பரவாயில்லை ஒரு உண்மையை சொல்லுகிறேன்.
உங்களின் கார் மற்றும் பைக்கை அதிகம் நேசித்தால் உங்களை விபத்தில் சிக்க வைக்காது. வழியில் ரிப்பேர் ஆகி உங்களை நடக்கவும் வைக்காது. பைக்கை நீங்கள் ஓட்டும்பொழுது அதனை நேசித்து ஓட்டவும். போடா ராசா என்று தட்டிக்கொடுத்து அதாவது உங்களின் மனதில் நினைத்தாலே போதும். அதில் இருக்கும் சக்தி உங்களை காப்பாற்றும்.
இதுவரை நீங்கள் இப்படி செய்யவில்லை என்றாலும் இனிமேல் செய்யுங்கள். நல்ல முன்னேற்றம் தெரியும். சக்தி என்றால் என்ன என்றும் உங்களுக்கு புரியும். மிக எளிதான ஒரு ஆன்மீக பயிற்சி. செய்து பாருங்கள் சக்தியைப்பற்றி புரிந்துக்கொள்ளலாம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
1 comment:
Enakku thalai suththuthu sir.
Post a Comment