வணக்கம் நண்பர்களே!
கடக லக்கினத்தில் ஒருவர் பிறந்தால் எப்படி அடுத்த பிறவி எப்படி அமையும் என்பதை பார்க்கலாம்.
கடக லக்கினம்
கடக லக்கினத்தில் ஒருவர் பிறந்தால் எப்படி அவருக்கு மரணம் ஏற்படும் என்பதைப்பற்றி பார்க்கலாம். இவர்களுக்கு மரணம் என்பது இயற்கைக்கு மாறாக மரணம் ஏற்படும். ஒரு சிலருக்கு வெட்டுப்பட்டுக் கூட இறப்பதற்க்கு வாய்ப்பு இருக்கிறது. வெட்டுப்பட்டு என்றார் மருத்துவமனையில் ஆப்ரேஷன் வழியாக வெட்டுப்பட்டு கூட இறக்ககூடும்.
வாழ்க்கையின் இறுதிநாளில் மிகவும் கஷ்டப்பட்டு இறக்கநேரிடும். உங்களின் குடும்ப உறுப்பினர்கள் உங்களை கைவிட்டுவிடவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் கொஞ்சம் எல்லாவற்றிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
மறுபிறவி
உங்களின் வீட்டில் இருந்து வடக்கு திசையில் பிறக்ககூடும். உங்களின் வீட்டில் உள்ளவர்கள் அதிகம் பேர் கணக்கு சம்பந்தப்பட்டு துறையில் அதுவும் அரசாங்கதுறையில் வேலை செய்யக்கூடும். உங்களின் வீட்டிற்க்கு அருகில் பெருமாள் கோவில் இருக்ககூடும்.
உங்களின் குடும்பத்தில் இரண்டு பேர்கள் இருப்பார்கள். உங்களோடு ஒரு சகோதர் அல்லது சகோதரி இருப்பார். உங்களின் தந்தை ஒரு அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்வார். உங்களின் தாயார் வீட்டில் இருப்பார்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment