வணக்கம் நண்பர்களே!
அம்மன் பூஜையின் படங்களை பார்த்து அனைத்து நண்பர்களும் பாராட்டினார்கள். அனைவருக்கும் நன்றி.
ஒவ்வொரு பூஜையிலும் இந்த அளவுக்கு மேல் அலங்காரம் நாம் செய்யலாம். ஒரு நாள் முழுவதும் எடுத்துக்கொண்டு செய்யவேண்டும். ஒரு மாதத்தில் இப்படி செய்து விட்டு அடுத்த மாதம் இந்த அலங்காரத்தில் இருந்து குறைத்து செய்தால் அம்மன் அந்தளவுக்கு ஏற்றுக்கொள்வதில்லை. படிப்படியாக தான் பூஜையை உயர்த்தவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.
ஒவ்வொரு இடத்திலும் நான் பூஜை செய்யும்பொழுது நான் பூஜையில் அதிககவனம் செலுத்தி அதிகமாக செலவு செய்து செய்வது உண்டு. அப்பொழுது தான் நாம் நினைக்கும் செயலை அம்மன் நமக்கு நடத்திக்கொடுக்கும். தொழில் செய்பவர்களுக்கு எல்லாம் இப்படிபட்ட பூஜையை பரிந்துரை செய்வோம்.
நீங்கள் வீட்டில் அல்லது குலதெய்வத்திற்க்கு என்று பூஜை செய்யும்பொழுது இப்படி அலங்காரம் செய்யுங்கள். அதே நேரத்தில் உங்களின் பணத்திற்க்கு தகுந்தவாறு பூஜை செய்துக்கொள்வது நல்லது.
நான் அதிக அளவில் பூஜை செய்ய சொன்னேன் என்று அதிக செலவை செய்துக்கொண்டு இருப்பீர்கள். உங்களின் வருமானத்திற்க்கு தகுந்தமாதிரி உங்களின் பூஜையை வைத்துக்கொள்வது நல்லது.
ஒரு அம்மனுக்கு எந்த அளவுக்கு நாம் அலங்காரம் செய்கின்றோமோ அந்தளவுக்கு அதன் சக்தியை வெளியில் எடுக்கமுடியும் என்ற காரணம் தான் அம்மனுக்கு பெரிய அளவில் அலங்காரம் செய்வது உண்டு.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
Intha murai ella kadavulukkum porundhuma sir?
Post a Comment