Followers

Wednesday, April 23, 2014

காவல் தெய்வம்


வணக்கம் நண்பர்களே!
                    பல நாட்கள் சென்ற பிறகு இன்று காளிகாம்பாளை தரிசனம் செய்யும் வாய்ப்பு வந்தது. சென்று வந்தபிறகு பதிவை எழுதுகிறேன். அம்மனை தரிசனம் செய்வது அதுவும் கூட்டம் இல்லாதபொழுது தரிசனம் செய்வது நன்றாக இருக்கும். சென்னையில் எத்தனையோ பேர் இந்த பதிவுகளை படிக்கின்றனர். நான் பல வருடங்களாக சொல்லிக்கொண்டே இருக்கிறேன் ஆனால் எத்தனை பேர் அங்கு சென்று தரிசனம் செய்து இருப்பார்கள் என்பது தெரியாது. என்ன ஒன்று நம்ம ஆட்கள் அவ்வளவு எளிதில் எதற்கும் சென்று விடுவார்களா என்ன அட போடா இருக்கின்ற வேலையில் இது எல்லாம் என்று அலுத்துக்கொள்வார்கள்.

சென்னையில் இருந்துக்கொண்டு தரிசனம் செய்யவில்லை என்றால் உண்மையில் பாவப்பட்டவர்களாக தான் இருக்கமுடியும். சென்னையை விட்டு நானும் வெளியில் சென்றுவிடலாம என்று பல முறை முயற்சி செய்து இருக்கிறேன் ஆனால் இந்த காளிகாம்பாள் அன்னை விடமாட்டேன்கிறது. இன்னும் எத்தனை நாளைக்கு நான் வரட்டும் என்று கணக்கு வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. 

ஒவ்வொரு மனிதனும் எந்தந்த ஊர்களில் இருக்கின்றீர்களோ அந்த ஊரில் உள்ள காவல் தெய்வத்தை வணங்கிக்கொள்ளுங்கள். இன்றைய கலியுகத்தில் நகரம் எல்லாம் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை அட வெளியில் சென்று வீடு திரும்புவதற்க்கு கூட இன்று கடவுளின் அனுக்கிரகம் வேண்டும். ஏன் என்றால் சாலை விபத்துக்கள் அப்படி நடைபெறுகிறது. நாம் நன்றாக வண்டி ஓட்டினாலும் எதிரே வருபவன் நன்றாக வண்டி ஓட்டுவானா என்பது யாருக்கு தெரியும் அந்த காரணத்தால் நீங்கள் இருக்கும் ஊரின் காவல்தெய்வத்தை வணங்கும்பொழுது அந்த காவல் தெய்வம் உங்களை காப்பாற்றும்.

நான் எந்த ஊருக்கு சென்றாலும் முதல் வேலையாக அந்த ஊரின் காவல்தெய்வத்தை வணங்குவது தான் எனது முதல் வேலையாக வைத்திருப்பேன். அந்த ஊரின் காவல்தெய்வத்தை நான் வணங்கினால் அந்த ஊரின் காவல் தெய்வம் எனக்கு எல்லா வேலையும் நன்றாக நடத்திக்கொடுத்துவிடும்.நான் செய்ததை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன். பிடித்து இருந்தால் பின்பற்றலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: