Followers

Thursday, April 17, 2014

பரிகாரம்

வணக்கம் நண்பர்களே!
                    ஒரு நபருக்கு ஒரு பரிகாரம் பரிந்துரைச்செய்தால் உடனே நமக்கு நடந்துவிடும் என்று பல நண்பர்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படி எல்லாம் உடனே நடந்துவிட்டால் இந்த உலகத்தில் பிரச்சினையை ஏற்படாத நிலை ஏற்படும். மனிதன் கடவுளை கண்டு பயம்கொள்ள மாட்டான். 

ஒரு பரிகாரம் குறைந்தபட்சம் அதன் வேலையை தொடங்க நாற்பத்தெட்டு நாட்கள் எடுத்துக்கொள்ளும். ஒரு சில பரிகாரங்கள் தொன்னூறு நாட்கள் எடுத்துக்கொள்ளும். நாம் உடனே தீர்வு ஏற்படவேண்டும் என்று நினைத்தால் அது தவறான ஒரு கருத்து. ஒரு சிலருக்கு உடனே நடத்திக்கொடுப்பது உண்டு. அது எல்லாம் தொழில் வழியாக வருபவர்களுக்கு அப்படி செய்துக்கொடுப்பது உண்டு.

தொழில் செய்பவர்களுக்கு மட்டும் ஏன் உடனே நடக்கிறது என்றால் அவர்களுக்கு நாங்கள் படிப்படியாக உயர்த்துவதற்க்கு நாங்கள் பல வேலைகளை செய்துக்கொண்டே இருக்கிறோம். அந்த வேலைகள் எல்லாம் அவர்களுக்கு செய்வதால் அவர்களின் கோரிக்கைகள் உடனே நடைபெறும்.

தனிப்பட்ட பரிகாரத்திற்க்கு என்று வருபவர்களுக்கு அப்படி எல்லாம் நாம் செய்யமுடியாது என்பதால் கொஞ்ச நாட்கள் எடுத்துக்கொள்கிறது. பரிகாரம் செய்தால் கொஞ்சநாட்கள் நாம் பொறுமையாக தான் இருக்கவேண்டும்.

நீங்களே பரிகாரம் செய்யும்பொழுது அது ஒழுங்காக செய்யபடுவதில்லை. மனது ஒன்றி செய்யப்படுவதில்லை அந்த காரணத்தால் தான் நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்கிறது. நீங்களே பரிகாரம் செய்தால் நல்ல மனநிலையில் இருந்துக்கொண்டு பரிகாரத்தை செய்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Mana amaithikku nangale parikaram seyya mutiyuma?