Followers

Sunday, April 20, 2014

குழந்தைகளுக்கான ஆன்மீகம்


ணக்கம் ண்பர்களே!
                    கோடை விடுமுறையில் உங்களின் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மற்றும் பக்கத்து வீட்டில் உள்ள குழந்தைகளை எல்லாம் வைத்து ஆன்மீக வகுப்புகளை எடுங்கள். 

குழந்தைகளுக்கு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விசயங்களை அனைத்தையும் கற்றுக்கொடுங்கள். குழந்தைகளுக்கு ஏன் இந்த வயதில் ஆன்மீகம் என்று நமது ஊர்களில் உள்ளவர்கள் சொல்லி தடைசெய்துவிடுகிறார்கள். சின்ன குழந்தையாக இருக்கும்பொழுது ஆன்மீகத்தை தராமல் போன காரணத்தால் மட்டுமே நீங்கள் எல்லாம் ஆன்மீக பிளாக்கை தேடிபடித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

உங்களின் நிலை உங்களின் குழந்தைகளுக்கும் ஏற்படாமல் இருக்க சின்ன வயதிலேயே ஆன்மீக சம்பந்தப்பட்டவைகளை சொல்லிக்கொடுங்கள். ஒரு குழந்தையாக இருந்தால் கற்பதற்க்கு கடினமாக இருக்கும் அதனால் பக்கத்து வீட்டு குழந்தைகளையும் சேர்த்து கற்றுக்கொடுக்கும்பொழுது அவர்கள் மகிழ்ச்சியாக கற்றுக்கொள்வார்கள்.

இந்த நேரத்தில் விடுமுறை நாட்கள் என்பதால் அவர்களின் நேரத்தை பயன் உள்ளதாக மாற்றலாம். அவர்கள் ஆன்மீகத்தை கற்றுக்கொள்ளும்பொழுது அவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினால் அவர்கள் மகிழ்ச்சியாக கற்றுக்கொள்வார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: