Followers

Monday, April 21, 2014

விரைய தசா பகுதி 1


வணக்கம் நண்பர்களே!
                    அனைவரும் அதிர்ஷ்டத்தைப்பற்றி கேட்டுக்கொண்டே இருந்தனர். நாமும் அதற்கு தகுந்தார்போல் பதிவுகளை தந்துக்கொண்டு இருக்கிறோம். ஒரு சிலருக்கு வரும் பணத்தை ஒழுங்காக பாதுகாக்க தெரியாத காரணத்தால் கூட பணம் கையை விட்டு போகின்றது என்பதை நான் பல பேர்களிடம் பார்த்து இருக்கிறேன்

இதற்கு எல்லாம் பல காரணங்கள் இருந்தாலும் அவர் அவர்களின் ஜாதகத்தில் அப்படிப்பட்ட கிரகங்களின் தாக்கம் இருப்பதால் மட்டுமே இப்படி நடைபெறுகிறது என்பதை சோதிடர்களாக இருந்துக்கொண்டு சொல்லவில்லை என்றால் மக்கள் செலவு செய்துக்கொண்டு தான் இருப்பார்கள். நாட்டை திருத்தவில்லை என்றாலும் பதிவுக்கு வரும் உங்களுக்காவது எனக்கு தெரிந்த விசயத்தை சொல்லிவிடவேண்டும் என்பதற்க்காக இந்த தொடரை தொடங்குகிறேன்.

நாம் எப்படி எல்லாம் வீணாக போகிறோம். அதாவது நமது பணம் சொத்து மரியாதை மற்றும் பல எல்லாவற்றிலும் எப்படி அழிகிறோம் என்பதை காட்டும் விரையஸ்தானத்தைப்பற்றி இனி பார்க்கலாம்.

இந்த தொடரை தசாவோடு ஒப்பிட்டு எழுதபோகிறேன். உங்களுக்கு தசா நடைபெறாவிட்டாலும் இந்த வீட்டு தசா வழியாக தான் உங்களின் விரையம் முழுவதும் செல்லும் என்பதை சொல்லிவிடுகிறேன். எனக்கு இந்த தசா நடைபெறவில்லை என்று படிக்காமல் விட்டுவிடாதீர்கள். அனைவரும் படியுங்கள் உங்களுக்கு பயன்படும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: