வணக்கம் நண்பர்களே!
குலதெய்வ வழிப்பாட்டில் பச்சை பரப்புதலைப்பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் என்று சொல்லிருந்தேன். அதனை நமது நண்பர்கள் வெளியில் சொல்லும்பொழுது ஒரு சிலர் கிண்டல் செய்கின்றனர். எப்படி வெளியில் சொல்லுவது என்று கேட்டனர்.
ஒரு மனிதன் நடக்கமுடியாமல் இருந்தால் அவன் ராமா ராமா என்னை நடக்க வை என்று சொல்லுவான். அவன் நடந்த பிறகு ராமன் என்ன செய்தான். நானாகவே நடந்தேன் என்று சொல்லுவான். அப்படிப்பட்ட மக்கள் நம் மக்கள். இவர்களுக்கு எல்லாம் நாம் வழிப்பாட்டைப்பற்றி சொல்லிக்கொடுப்பது அவ்வளவு எளிதான விசயம் கிடையாது.
உங்களை போல் நானும் பல இடத்தில் இப்படிப்பட்ட அனுபவத்தை பெற்று இருக்கிறேன். ஒரு காலத்தில் பார்த்தால் பதிவு எல்லாம் எழுதுவதற்க்கு முன்பு என்னிடம் பிராமணர்கள் மட்டும் வந்து இப்படிப்பட்ட வழிப்பாட்டு முறைகளை வந்து கேட்டார்கள் அவர்களுக்கு நான் சொல்லிக்கொடுத்து இருக்கிறேன்.
அப்பொழுது ஒரு சில நண்பர்கள் என்னிடம் வந்து நீ என்ன பிராமணர்களுக்கு மட்டும் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்கள். அவர்களிடம் நான் சொன்னது. நான் பிராமணன் கீழ்சாதியில் உள்ளவன் என்று பார்ப்பதில்லை. யார் என்னிடம் ஆவலுடன் வந்து கேட்கின்றனரோ அவர்களுக்கு வழிப்பாட்டு முறைகளை சொல்லி தருவது எனது கடமை. அவர்கள் ஆவலுடன் வருகிறார்கள். நீங்கள் வருவதில்லை. கேட்கிறவனுக்கு தான் உபதேசம் செய்யமுடியும் என்று சொன்னேன்.
நம்ம ஆளுங்களுக்கு அவ்வளவு எளிதில் புரியவைக்கமுடியாது. உங்களோடு இருப்பவர்கள் யார் கஷ்டப்படுகிறார்களோ அவர்களுக்கு இப்படிபட்ட வழிப்பாட்டு முறைகள் இருக்கின்றன. செய்ய விருப்பம் இருந்தால் செய் என்று கேட்டுவிட்டு விருப்பம் இருந்தால் செய்ய சொல்லிக்கொடுங்கள்.
உங்களின் வீட்டில் செய்வதை யார் கேலி கிண்டல் செய்தாலும் அதனைப்பற்றி கவலைப்படாமல் செய்யுங்கள். உங்களுக்கு கூடியவிரைவில் நல்ல மாற்றம் வரும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment