Followers

Thursday, April 10, 2014

தொழில் கூட்டாளி பகுதி 2


ணக்கம் ண்பர்களே!
                    தொழில் கூட்டாளிகள் என்று பகுதியில் ரிஷப ராசியை நாம் தொழில் கூட்டாளியாக தேர்ந்தெடுக்கலாமா என்று பார்ப்போம். 

பிறர்க்கு நன்மை செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள். பொதுவாக அனைவரிடம் சகஜமாக பழகுபவர்கள். அதே நேரத்தில் நேர்மையாகவும் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள். ரிஷபராசியை நாம் தொழில் கூட்டாளியாக நாம் சேர்த்துக்கொண்டாலும் நமக்கு நேர்மையாக தான் நடப்பார்கள். அதே நேரத்தில் தன் சகோதர்களுக்கு அதிகம் செய்யவேண்டும் என்று நினைப்பார்கள். 

இவர்கள் அதிகமாக பெண்களிடம் தான் பழகுவார்கள். உங்களின் தொழில் எதிரிகள் பெண்களை வைத்தே இவர்களை வேலைக்கு வாங்கிவிடுவார்கள். அதில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

அதிகமாக ஆடம்பரத்தை விரும்புவார்கள். ஆடம்பரத்திற்க்கு அதிகம் செலவு செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள். அலுவலகத்தை கூட ஆடம்பரமாக வைக்கவேண்டும் என்று சொல்லுவார்கள்.

இவர்களை கூட்டாளியாக வைத்துக்கொண்டால் அதிக பணம் கொடுப்பார்கள். உங்களின் தேவைக்கு இவர்களிடம் பணம் இருக்கும். உங்களின் தொழிலை உயர்த்திக்கொள்ள இவர்கள் உதவுவார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: