வணக்கம் நண்பர்களே!
இன்றைய காலகட்டத்தில் மக்களின் மனநிலை அனைத்திலும் சந்தேகப்படும் படி தான் இருக்கிறது. மக்களின் மனநிலை அப்படி இருப்பதால் நடக்கும் வேலை நடக்காமல் போய்விடுகிறது. என்னை ஒருவர் சந்திக்க வருகிறார் என்றால் எனக்கு இது பிரச்சினை இதற்கு தீர்வை தாருங்கள் என்று கேட்டால் நான் அதற்கு தீர்வை சொல்லிவிடபோகிறேன்.
நமது நண்பர்கள் என்னை வந்து சந்தித்த உடனே நீங்கள் எந்த ஊர் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களின் குடும்பம் என்ன என்று பல கேள்விகளை கேட்பார்கள். வந்த கேள்வியை விட்டுவிட்டு தேவையில்லாத விசயத்தில் இவர்களின் மனம் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும்.
ஒரு காரியவாதிக்கு வந்த வேலை என்னவோ அதனை மட்டும் தான் பார்ப்பார்கள். காரியம் நடக்கவேண்டாம் என்று நினைப்பவர்கள் வந்த வேலையை விட்டுவிட்டு அடுத்த வேலைக்கு மனதை செலுத்துவார்கள். உண்மையில் இது நமது வளர்ப்பு முறையில் செய்யும் தவறால் வருகிறது.
ஒரு குழந்தை பிறந்த நாளில் இருந்து அதனை அனைத்தையும் சந்தேகப்படும்படி தான் வளர்க்கிறார்கள். அப்பா தன் குழந்தையுடன் செல்லம் அப்பா இல்லாத நேரத்தில் வீட்டிற்க்கு யாராவது வருகிறார்களா என்று மனைவி இல்லாத நேரத்தில் தந்தை தன் குழந்தையிடம் இப்படி கேட்கிறார். அம்மா தன் குழந்தையிடம் செல்லம் அப்பா கடைக்கு செல்லும்பொழுது யார் கூடவும் பேசுகிறாரா என்று கேட்கிறாள். அப்பொழுது குழந்தை மனதில் என்ன நடக்கிறது. நாம் அனைத்தையும் சந்தேகப்படவேண்டும் என்று நினைக்கிறது இது வளர்ந்து பெரிய ஆளாக இருந்தால் கூட இதே பார்முலாவை அனைத்திலும் செய்து பார்க்க நினைக்கிறார்கள்.
சந்தேகப்படவேண்டியது தான் ஆனால் அது உங்களை பாதிக்கும் விசயத்தில் மட்டும் சந்தேகப்படவேண்டும். உங்களுக்கு தேவையில்லாத விசயத்தில் தலையீடகூடாது.
ஒரு முறை திருவண்ணாமலை சென்று இருந்தேன். ஒரு சாமியாரை சந்திக்க சென்று இருந்தேன். அவர் என்னை பார்த்துவிட்டு நாளை வா என்று சொன்னார். நானும் அங்கு ஒரு ரூம் போட்டு தங்கிவிட்டேன். அன்று இரவு எனது கனவில் அந்த சாமியார் ஒரு பெண்ணோடு உறவு வைத்துக்கொள்வது போல் எனது கனவில் தெரிகிறது.
மறு நாள் காலையில் அவரை சந்தித்தேன். அவர் என்னிடம் நீ மறுபடியும் வந்திருக்கிறாயா என்று கேட்டார். நான் அவரிடம் சாமி ஒவ்வொரு தனிமனிதனின் தனிப்பட்ட விசயத்தில் நான் தலையீடு செய்வதில்லை. அது எனக்கு வேலையும் கிடையாது. எனது வேலை நான் கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன். எனது தேவை என்னவோ அதனை பெற்றுவிட்டால் எனக்கு சந்தோஷம் என்று சொன்னேன்.
அவர் நீ தான் தகுதியான ஆள் என்று ஒரு சில நல்ல விசயங்களை எனக்கு சொல்லிக்கொடுத்தார். அவர் செய்தது ஒரு சித்து வேலை என்று எனக்கு தெரியும். அதனைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. நமக்கு என்ன தேவையோ அதனை எடுப்பதில் தான் நமது திறமை அடங்கியிருக்கிறது.
நித்தியானந்த சாமியாரை பற்றி எத்தனையோ விசயங்களை நம்ம ஆள்கள் பரப்பினார்கள். அதனைப்பற்றி நான் கவலைப்பட்டது கூட கிடையாது ஏன் என்றால் அவர் சொன்ன நல்ல விசயங்களை நாம் எடுத்துக்கொண்டு சென்றால் போதும். அவர் ஒரு தவறை செய்தார் என்று நாம் நினைத்துக்கொண்டு நீ தவறானவன் என்று ஒதுக்கி தள்ளிவிடமுடியாது. நாம் அவரோடு வாழ போவதில்லை நமக்கு தேவை சக்தி அளிக்கும் விசயங்களை மட்டும் பெறுவது.
யாரைப்பற்றியும் நல்லவன் என்று சொல்லுவதற்க்காக இதனை சொல்லவில்லை. உங்களுக்கு என்ன தேவை என்று மட்டும் பார்த்து நீங்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்றால் பத்து வருடம் கஷ்டப்பட்டு எடுக்க வேண்டியதை ஒரு நாளில் நீங்கள் எடுத்துவிடமுடியும். உங்களை ஒரு நாளில் பரிசோதனை செய்து பார்த்தால் நீங்கள் செய்யும் முக்கால்வாசி செயல்கள் அனைத்தும் தேவையற்ற வேலையாகவே இருக்கும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
EXCELLENT TOPIC SIR
Those who have spiritual knowledge only can understand this topic
Thanks
Antony
Post a Comment