Followers

Saturday, April 26, 2014

விரைய தசா பகுதி 5


வணக்கம் நண்பர்களே!
                    விரைய தசாவைப்பற்றி இப்பதிவில் ஒரு விசயத்தை பார்க்கலாம். பல நாட்டு அரசுகள் மற்றும் கம்பெனிகள் தனி நபர்கள் விழுந்த கதையை பார்த்தால் சபலம் என்ற ஒன்று தான் முதல் காரணமாக இருக்கும். 

ஒரு மனிதனாக பிறந்தால் அவன் பெண்ணை விரும்பினால் தான் அவன் மனிதன் என்ற நிலையை அ்டைகிறான் என்று பல பேர்கள் சொல்லியுள்ளார்கள். ஏன் மகான்கள் கூட இதனை சொல்லியுள்ளனர். அதனை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

மோகம் என்ற ஒன்று வருவதால் திருமணம் என்று ஒன்றை நடத்திக்கொண்டு சமுதாயத்தில் வாழ ஆரம்பித்துவிடுகிறார்கள். இது நமது பாரம்பரியத்தோடு தொடர்பு வைத்து வருகின்ற ஒன்று. நமது பாரம்பரியம் ஒரு பெண்ணிற்க்கு மேல் வேண்டாம் என்று சொல்லி தான் திருமணம் என்ற ஒன்றை முன்னால் வைக்கிறது. அதோடு ஒரு மனிதன் இருந்தால் பிரச்சினை இல்லை. ஒன்று இல்லாமல் பலவற்றை தேட ஆரம்பித்தவுடன் அவனுக்கு சபலத்தால் பிரச்சினை வந்துவிடுகிறது.

ஒரு மனிதன் சபலத்தால் அழிக்கிறான் என்றால் இந்த விரையவீடு இல்லாமல் நடைபெறமுடியாது. இந்த வீட்டு வழியாக தான் சபலத்தால் அழிவானா என காட்டும் ஒரு இடம். இங்கு அமரும் கிரகங்களின் நிலையை பொருத்து ஒருவரின் சபலம் எப்படி வரும் என்று காட்டும்.


இனி என்னோடு தொழில் தொடர்புகள் வைத்திருப்பவர்களுக்கு சொல்லும் கருத்துகளை இங்கு உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்.

சபலம் என்ற ஒன்று மனிதனுக்கு வருவது இயற்கையான ஒன்று தான். அந்த சபலத்தை தீர்க்கவேண்டிய இடத்திற்க்கு சென்று தீர்த்துக்கொள்ளவேண்டும். உங்களின் தொழிலியே சபலத்தை தீர்க்க நினைத்தால் உங்களின் தொழில் உங்களை விட்டு சென்றுவிடும்.

மேலை நாட்டினருக்கும் சபலம் என்ற ஒன்று இருக்கும் ஆனால் அவர்கள் சபலத்தை தன் தொழிலில் தீர்க்க நினைக்கமாட்டார்கள். தொழில் வேறு சபலம் என்பது வேறாக பார்ப்பார்கள். நம்ம ஆட்கள் கம்பெனியில் வேலை செய்யும் ஒரு பெண்ணிற்க்காக ஒரு கோடி மதிப்புள்ள கம்பெனியை எழுதிவைத்துவிடுவார்கள். காரணம் சபலத்தை தன் கம்பெனியில் தேடியதால் வந்த விளைவு. கம்பெனியை எழுதிவைத்துவிட்டு நடு தெருவிற்க்கு வந்துவிடுவார்கள். 

உங்களின் தொழில் அழிவதற்க்கு முதல் காரணமாக அமைவது இந்த விசயம் மட்டுமே. தயவு செய்து நீங்கள் இந்த விசயத்தில் மேலைநாட்டீனர் போல் இருங்கள் என்று சொல்லுவேன்.

நீங்கள் எல்லாம் இதனை படித்துவிட்டு உங்களின் ஊரில் உள்ள அலுவலகத்தை கொஞ்சம் பாருங்கள். ஒவ்வொரு அலுவலகத்திலும் ஏதோ ஒரு பெண் அந்த கம்பெனியை நடத்திக்கொண்டிருப்பாள். நம்ம ஆளுங்க செய்யும் முதல் தவறு இங்கே இருந்து தான் ஆரம்பிக்கும். கம்பெனி அவனை விட்டு கொஞ்சம் நாளில் சென்றுவிடும்.

சபலம் என்ற ஒன்று ஆண்டவன் நமது விதி எழுதும்பொழுதே எழுதிவைத்துவிட்டான் ஆனால் சபலம் எல்லையை மீறி போககூடாது.


தொடர்ந்து பார்க்கலாம்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: