வணக்கம் நண்பர்களே!
நேற்று என்னுடன் கந்தையா ஐயா பேசினார். குலதெய்வம் தெரியாதவர்கள் மற்றும் பிற நாட்டில் உள்ளவர்களுக்கு குலதெய்வம் இருக்காது அப்படி இருப்பவர்கள் எப்படி வீட்டில் வழிபாட்டை செய்யவேண்டும் என்று ஐயா அவர்கள் கேட்டார்கள்.
அவரிடம் விளக்கம் அளித்ததை உங்களிடம் சொல்லுகிறேன். நாம் என்ன தான் வெளியில் இருந்தாலும் நமக்கு குலதெய்வம் இருக்கின்றதா என்று நமது முன்னாேர்கள் வாழ்ந்த இடத்திற்க்கு சென்று விசாரித்து பார்க்கவும். நன்றாக விசாரித்து பார்த்தால் எப்படியாவது நமக்கு குலதெய்வத்தைப்பற்றி தெரிவதற்க்கு வாய்ப்பு இருக்கிறது.
கடைசியில் உங்களால் தேடிக்கண்டுபிடிக்கமுடியவில்லை என்ற நேரத்தில் நீங்கள் ஏதாவது ஒரு இஷ்டதெய்வத்தை வணங்கிக்கொண்டு வருவீர்கள் அல்லவா. அந்த தெய்வத்திற்க்கு பச்சை பரப்பி வீட்டிலேயே வணங்கி வரலாம்.
ஒரு சிலர் மகான்களை வணங்கி வருவார்கள். தமிழ்நாட்டில் ஒரு சிலர் சித்தர்களையும் இஷ்ட தெய்வமாக வணங்கி வருவார்கள். அவர்களும் இந்த வழிபாட்டை வீட்டில் செய்யலாம். குலதெய்வத்திற்க்கு செய்வது போல் இதனையும் செய்யலாம்.
குலதெய்வத்திற்க்கு செய்துவிட்டு இஷ்டதெய்வத்திற்க்கும் செய்கிறேன் என்று ஒரு சிலர் கேட்ககூடும். ஏதாவது ஒரு வழிபாட்டை மட்டும் செய்து வாருங்கள். பச்சை பரப்புதலைப்பற்றி உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்தினார்களா?
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment