Followers

Wednesday, April 23, 2014

வெளிபடையான பேச்சு உங்களை உயர்த்தும்


ணக்கம் ண்பர்களே!
                    என்னிடம் சோதிடம் பார்ப்பவர்கள் என்னிடம் எதிர்பார்ப்பது என்ன என்று தெளிவாக சொல்லிவிடவேண்டும். சுற்றி வளைத்து பேச வேண்டாம். எனக்கு பணம் வழியில் தான் முன்னேற்றம் வேண்டும் என்று நினைத்தால் எனக்கு பணம் தான் வேணும் என்று தெளிவாக சொல்லிவிடவேண்டும்.

தமிழ்மக்கள் அதிகம் பேர் பணத்தை எதிர்பார்ப்பது கிடையாது என்பது எனக்கு தெரியும். கணவன் மனைவிக்குள் பிரச்சினை என்று தான் அதிகம் பேர் வருவார்கள். இதனை எல்லாம் தீர்க்கவேண்டும் என்றால் ஒரு ஆயிரம் சாமியார் வந்தால் கூட நடைபெறாத காரியமாக தான் இருக்கும்.  

ஒரு சிலர் எதற்க்காக வருகின்றனர் என்பது கூட தெரியாது. பல முறை தொடர்புக்கொண்டு பேசுவார்கள். கடைசி வரை என்ன என்று சொல்லுவதே கிடையாது. கடைசியில் நீங்கள் வேற ஆட்களை பாருங்கள் என்று சொன்னவுடன் நீங்கள் தானே சார் பெரிய அளவில் வரவேண்டும் என்றால் என்னிடம் வாருங்கள் என்று சொன்னீர்கள் என்று கேட்பார்கள். அதாவது பணவசதி மற்றும் சமுதாயத்தில் மதிப்பு எல்லாம் வேண்டும் என்று நினைத்துக்கொண்டு வந்துவிட்டு  கடைசிவரை சொல்லாமல் இருப்பார்கள்.

என்னைப்பொருத்தவரை நீங்கள் தெளிவாக சொல்லிவிடவேண்டும் எனக்கு இது தான் வேண்டும் என்று கேட்டுவீட்டீர்கள் என்றால் அதற்கு தகுந்தார் போல் உங்களை தயார் செய்துவிடமுடியும்.

வெளிப்படையாக சொல்லும்பொழுது அதனை நான் யோசித்து என்ன செய்யவேண்டும் என்று சொல்லிவிடுவேன். என்னிடம் சொல்லாமல் இருந்தால் ஒன்றும் செய்யமுடியாது. தெளிவாக சொல்லிவிடுங்கள். ஒரு நல்லமுன்னேற்றத்தை ஒரு சில நாட்களிலேயே காட்டிக்கொடுப்பேன். அதற்கு பிறகு நடந்துக்கொள்ளும் விதத்தை வைத்து உயர்த்துவேன்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: