Followers

Saturday, April 19, 2014

பொது தகவல்


வணக்கம் நண்பர்களே!
                    நமது மதத்தில் என்னற்ற கடவுள் வழிபாடு இருந்தாலும் அனைவரும் அனைத்து கடவுளையும் சென்று வழிபாடு செய்வார்கள். அதாவது இந்து மதத்திற்க்குள் இருக்கும் கடவுளை சொன்னேன். பெருமாளை கும்பிடும் மக்கள் மட்டும் எந்த கடவுளையும் வணங்கமாட்டார்கள். அனைத்தையும் பெருமாளே செய்கிறார் என்று வேறு எந்த கடவுளையும் ஏற்றுக்கொள்வதில்லை. பெருமாள் மட்டும் தான் உயர்ந்தவர் என்று சொல்லுவார்கள்.

பெருமாளே பல இடங்களில் சிவனின் உதவியை நாடி தான் அவரே பிழைப்பார். இது எல்லாம் வேறு கதை இதனை சொன்னாலும் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதாவது இயேசுவை எப்படி மக்கள் ஏற்றுக்கொண்டால் அவர் தான் கடவுள் என்று சொல்லுகிறார்களோ அது போல் தான் பெருமாளை கும்பிடும் மக்களும் அவர் தான் கடவுள் என்பார்கள்.

ஒவ்வொருவரின் தனிப்பட்ட விசயத்தை பொருத்த விசயம் என்பதால் அதில் நான் தலையீடு செய்யவில்லை ஆனால் நீங்கள் பெருமாளை கும்பிடுவது போல் சிவனையும் கும்பிடுவது நல்லது. பல விசயங்களுக்கு அவர் உங்களுக்கு மிகுந்த உதவியை செய்வார். இதனைப்பற்றி நான் வெளியில் சொல்லாவிட்டாலும் பெருமாளை கும்பிடுவது போல் சிவனையும் நீங்கள் வணங்கிவாருங்கள்.

சிவனை வணங்கும் மக்கள் எளிதில் பெருமாளை ஏற்றுக்கொள்வார்கள். அதற்கு காரணம் அன்பே சிவம். அன்பு என்ற வார்த்தைக்கு மிகுந்த சொந்தகாரர் என்றால் அது சிவனாக தான் இருப்பார். பெருமாளை எப்படி நீங்கள் வணங்கிறீர்களோ அதுபோல் அன்போடு சிவத்தை பாருங்கள் சிவன் உங்களை ஒடிவந்து காப்பாற்றுவார்.


பெருமாளை வணங்குவது போல் சிவனையும் வணங்குங்கள். சிவனை வணங்குவது போல் பெருமாளையும் வணங்குங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

nallur parames said...

Enakku perumaal valipaadum,sivan valipaadum iru kankal ponradhu.

antonyarun said...

Dear sir
What about Sridi Saibaba ?