Followers

Thursday, April 3, 2014

புதிய கணக்கை தொடங்க நல்ல நாள்



ணக்கம் ண்பர்களே!
                    வாழ்க்கையில் முன்னேற்றம் காணவேண்டும் என்று நினைத்து என்னை தொடர்புக்கொள்கின்றனர். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்துக்கொண்டு வருகிறேன். பொதுவாக தொழில் செய்பவர்களுக்கு என்று தனிக்கவனம் எடுத்து செய்துக்கொண்டுவருகிறேன். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னுடைய வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள பல ஆன்மீகவழிகளை பின்பற்ற சொல்லிவருகிறேன்.

தொழில் செய்பவர்களுக்கு இந்த இப்பொழுது புதிய வருடம் ஆரம்பித்து உள்ளது. புதிய கணக்கை தொடங்கவேண்டும் என்று நினைத்து இருப்பார்கள். அதற்கு நல்ல நாளாக வெள்ளிக்கிழமை அன்று தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

தொழில் செய்பவர்களுக்கு இந்த இப்பொழுது புதிய வருடம் ஆரம்பித்து உள்ளது. புதிய கணக்கை தொடங்கவேண்டும் என்று நினைத்து இருப்பார்கள். அதற்கு நல்ல நாளாக 4/4/2014 வெள்ளிக்கிழமை அன்று தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். லட்சுமி தேவி உங்களின் தொழில் செழிக்க ஆசிர்வதிப்பாள்.

புதிய கணக்கை தொழில் செய்பவர்கள் ஆரம்பிப்பதுபோல் குடும்பத்தில் உள்ளவர்களும் ஆரம்பிக்கலாம். குடும்பத்தில் என்ன வருகிறது என்ன செல்லுகிறது என்பதை பார்த்தாலே பல குடும்பங்கள் முன்னேற்றத்திற்க்கு என்ன வழி என்று சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

வீட்டில் உள்ள பெண்மணிகள் வெளியில் இருந்து கணவர் சம்பாதித்து வந்து உங்களுக்கு கொடுப்பார் அல்லவா. அவர் கொடுத்த பணத்தையும் கணக்கு வைத்துக்கொள்வது நல்லது. உங்களின் குடும்ப வளர்ச்சிக்கு பயன்படும். அதனால் வீட்டில் உள்ளவர்களும் கணக்கை இந்த நாளில் தொடங்கிக்கொள்ளலாம்.

உங்களின் வீட்டில் பூஜையறையில் லட்சுமி தேவியை நினைத்துக்கொண்டு ஒரு சிறிய பூஜை செய்து இந்த கணக்கை தொடங்குங்கள். கண்டிப்பாக உங்களுக்கு லட்சுமி தேவி அடுத்த வருடத்தில் மிக உயர்ந்த இடத்தில் வைப்பாள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: