வணக்கம் நண்பர்களே!
ராகு தசாவிற்க்கு சிறந்த பரிகாரமாக உங்களுக்கு தெரிந்ததை எனது வழியில் சொல்லுகிறேன் செய்து பாருங்கள். ராகுவின் நட்சத்திரத்தை உடையவர்களும் மற்றும் ராகுவின் காரத்துவம் அதிகமாக எனக்கு இருக்கிறது என்று நினைப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்துக்கொள்ளலாம்.
அரச மரத்திற்க்கு கீழ் நாக சிலையை அதாவது இரண்டு பாம்போடு இருப்பது போல் நீங்கள் சிலை செய்து வைக்கலாம். சிலையை வைக்கும்பொழுது ஒரு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வது போல் நல்ல பூஜைகளை செய்து செய்யவேண்டும்.
அன்னதானம் செய்யவேண்டும். குறைந்தது இருபத்தைந்து பேருக்காவது அன்னதானம் செய்யவேண்டும். அதிகமாக கூட செய்யலாம். அவர்அவர்களின் வசதியை பொறுத்து செய்துக்கொள்ளுங்கள்.
அரசமரத்திற்க்கு அடியில் தான் நாகர் சிலை வைக்கவேண்டும். தனியாக அந்த சிலையை வைத்து அதனை மக்கள் வழிபட்டு வந்தால் உங்களின் தோஷம் நீங்கி நன்றாக வாழலாம்.
கேதுவின் தசா மற்றும் கேதுவின் நட்சத்திரத்தை உடையவர்களும் இதைப்போல் செய்யலாம். காலசர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இதனை செய்துக்கொள்வது நல்லது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment