Followers

Friday, April 25, 2014

பொது தகவல்


ணக்கம் ண்பர்களே!
                    ஒரு குழந்தை கீழே விழுந்தால் அதற்கு அவ்வளவு எளிதில் அடிப்படாது. கை கால் முறிவு ஏற்படாது. அதே நேரத்தில் குழந்தையின் வயதை கடந்தவர்களுக்கு கீழே விழுந்தவுடன் கை கால் முறிவு ஏற்பட்டுவிடுகிறது. 

என்ன காரணம் என்றால் குழந்தையின் மனதில் எந்தவித எதிர்ப்பும் இருப்பதில்லை. அது கீழே விழும்பொழுது அது எதிர்ப்பை காட்டுவதில்லை. அதனால் குழந்தைக்களுக்கு அடிப்படுவதில்லை. நமது மனநிலை எதிர்ப்பை காட்டிக்கொண்டே இருக்கின்றது. கீழே விழும்பொழுது கூட நமது மனநிலை எதிர்ப்பை காட்டிய உடன் முறிவு ஏற்பட்டுவிடுகிறது.

குழந்தைகளின் மனநிலையில் நீங்கள் இருக்கவேண்டும் என்றால் முதலில் நீங்கள் உங்களின் உடலுக்கு தகுந்த உடற்பயிற்சியை மேற்க்கொள்ளவேண்டும். உடலுக்கு உடற்பயிற்சி இல்லாமல் போனதால் உடலில் ஏகப்பட்டது தேங்கிவிடுகிறது. அந்த  தேக்கம் உங்களின் உடலில் நோயாக மாறிவிடுகிறது.

இன்றைக்கு நாம் சாப்பிடும் உணவு அனைத்தும் உரமாகமாறிவிட்டது. உரத்தை தான் நாம் சாப்பிடுகிறோம். இயற்கையில் விளைவது கிடையாது. அதிக மகசூலுக்காக உரத்தை அதிகம் போடுகிறார்கள். நாம் என்ன செய்யமுடியும். இது எல்லாம் அரசாங்கம் செய்யவேண்டும். 

உங்களுக்கு சொந்தமாக நிலம் இருந்தால் அதில் முடிந்தளவு காய்கறிகளை இயற்கை முறையில் வளர்க்க ஆரம்பியுங்கள். நகரபுறமாக இருந்தாலும் வீட்டின் மேல் உள்ள காலி இடத்திலாவது காய்கறிகளை வளர்த்து அதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

உங்களின் உடலுக்கு உணவு எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு உடற்பயிற்சி முக்கியம் என்பதை நினைவு வைத்துக்கொண்டு தினமும் பயிற்சி செய்யுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: