வணக்கம் நண்பர்களே!
இன்றைய காலத்தில் பல ஆன்மீகவாதிகள் தங்களால் முடிந்த ஆன்மீக விசயங்களை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறார்கள். தனக்கு தெரிந்த வழிமுறைகளை சொல்லிக்கொடுக்கின்றனர். ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைந்து தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நிறைய வாய்ப்புகள் இருந்தும் இன்றைய காலத்தில் உள்ள மனிதன் அதனை நோக்கி செல்லவதில்லை.
வாய்ப்பு இருந்தும் அவன் செல்லாதர்க்க்கு காரணம் அவனுக்கு அங்கு செல்ல தடை ஏற்படுத்துவது மட்டுமே. அப்படி என்ன தடை என்று பல நேரங்களில் நான் யோசித்து பார்த்து இருக்கிறேன். அதற்கு காரணம் ஒரு மனிதனை வழிநடத்தும் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வம் வாயடைத்து போவது தான் முதல் காரணமாக இருக்கின்றது.
இதனை கண்டுபிடித்து அந்த வழியை சொன்னாலும் இன்றைய தேதிக்கு 600 நண்பர்களுக்கு மேல் நமது பதிவு வந்தாலும் அதில் ஒரு சிலரால் மட்டுமே வழிபாட்டு முறைகளை தொடர்ச்சியாக பின்பற்றி வரமுடிகிறது. மற்ற அனைவரும் ஏதோ படித்துவிட்டு சென்றுவிடுகிறார்கள்.
குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வம் வாயடைத்து நிற்பதற்க்கு காரணம் என்ன என்று பார்த்தால் அதுவும் சோதிட ரீாியாக பார்த்தால் அவர்களுக்கு மறைவு இடமான மூன்றாம் ,ஆறாம், எட்டாம் மற்றும் பனிரெண்டாவது வீட்டு அதிபர்களின் கை ஓங்கி இருப்பதால் மட்டுமே இப்படி நடைபெறுகிறது.
மறைவு ஸ்தான அதிபர்களின் கை ஓங்கிவிட்டால் உங்களின் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்தின் சக்தி கிடைக்காமல் சென்றுவிடும். அதனை எல்லாம் நீங்கள் தெரிந்துக்கொண்டு உங்களின் வழிபாட்டு முறையினை கைவிட்டுவிடகூடாது. இந்த அதிபர்களின் கை ஓங்கும்பொழுது நீங்கள் தெய்வம் இருக்கின்றதா இல்லையா என்று பேச ஆரம்பித்துவிடுவீர்க்ள்.
உங்களின் பக்தி எப்படி இருக்கவேண்டும் என்றால் அதற்கு ஒரு உதாரணத்தை உங்களிடம் சொல்லுகிறேன். அதுபோல் உங்களின் பக்தி இருக்கவேண்டும். அதுவும் எவ்வளவு துன்பத்திலும் அந்த நம்பிக்கை வேண்டும்.
பிரகலாதனை தன் மகன் என்று பார்க்காமல் அவன் தகப்பன் இரணியன் கடுமையாக தண்டித்தான் ஆனாலும் பிரகலாதன் நாராயணர் மேல் உள்ள நம்பிக்கை குறையாமல் ஓம் நமோ நாராயணாய என்று சொல்லிக்கொண்டே இருந்தான் அல்லவா. அந்த நம்பிக்கையை தான் அவனை காப்பாற்றியது. அது போல் உங்களுக்கு சோதிடத்தில் உள்ள கிரகங்கள் தான் பிரச்சினையை ஏற்படுத்துகிறது என்று எண்ணி நீங்கள் நம்பிக்கையுடன் வழிப்பாட்டு முறையை பின்பற்றி வந்தால் அற்புதமான வாழ்க்கையை நீங்கள் அமைத்துக்கொள்ளமுடியும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
Mudinthalavu muyarchi seykiren.ஓம் நமோ நாராயணா
Post a Comment