Followers

Friday, April 18, 2014

சித்தர்கள்


வணக்கம் நண்பர்களே!
                    சித்தர்களைப்பற்றி பார்த்து வந்தோம் இடையில் ஒரு சில வேலைக்காரணமாக அந்த பதிவுகளை அப்படியே விட்டுவிட்டோம். பழைய சித்தர்களைப்பற்றி சொல்லும்பொழுது அதாவது பதினேட்டு சித்தர்களை நாம் பார்க்கமுடியாது என்று சொல்லிருந்தேன். மக்களுக்கு பதினேட்டு சித்தர்களை மட்டும் தான் பிடிக்கும். அதன் பிறகு வரும் சித்தர்களை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அந்த கதையை விட்டுவிட்டு நாம் மேட்டருக்கு வந்துவிடலாம். ஒவ்வொரு சித்தர்களும் ஒரு பிறவிலேயே தன் வேலையை அனைத்தையும் முடித்துவிடுவதில்லை. அந்த பிறவியில் விட்ட வேலையை அடுத்த பிறவியில் அதனை தொடர்ந்து செய்கிறார்கள். இந்த நேரத்தில் ஒரு கேள்வியை நீங்கள் கேட்க தோன்றும். இவர்களை எப்படி கடவுள் விட்டு வைக்கிறார். இவர்களுக்கு அப்படி என்ன சக்தி இருக்கும் என்று கேட்க தோன்றும். 

ஒரு பிறப்பு நடக்கும்பொழுது அந்த ஆத்மாவை இடை மறித்து தன் ஆத்மாவை அந்த உடம்பில் புகுத்தி தன் வேலை செய்கிறார்கள். கடவுள் ஒரு ஆத்மாவை ஒரு பெற்றோருக்கும் கொடுக்கும்பொழுது அந்த ஆத்மாவில் உள்புகுந்து தன் ஆத்மாவை செலுத்தி அவர்களின் காரியங்களை செய்துக்கொள்கிறார்கள். இது ஒரு தவறு போல் தெரியும் ஆனால் அவர்களின் வேலை மிகவும் புண்ணிய வேலையாக இருக்கும். இதனைப்பற்றி புரிந்துக்கொள்ளுவதற்க்கு கொஞ்சம் ஆன்மீகவாதியாக நீங்கள் இருந்தால் கண்டிப்பாக புரிந்துக்கொள்ளமுடியும்.

ஆத்மாவை உட்புகுத்தி வேலையை செய்துக்கொள்கிறார்கள். கூடுவிட்டு கூடு பாய்தல் என்று சொல்லுகிறார்கள் அல்லவா அது போல் செய்துக்கொள்வார்கள். ஆத்மாவை இடைமறித்து உள்புகுதல் வேலை இது. உங்களின் பதினேட்டு சித்தர்களுக்கு பிறகு பல சித்தர்கள் இந்த வேலையை செய்துக்கொண்டு இருக்கிறார்கள். யார் நினைத்தால் இதனை படிக்கும் நீங்கள் கூட ஒரு சித்தரின் ஆத்மாக இருக்கலாம். மனிதனாக பிறந்தால் தன் ஆத்மா இறக்கும்பொழுது அது சேரவேண்டிய இடத்திற்க்கு செல்லும். சித்தர்களாக இருந்தால் கண்டிப்பாக அது செல்ல வேண்டிய இடத்திற்க்கு செல்லாது. தன் இஷ்டம்போல் அது இருக்கும். 

பிறகு வரும் பதிவுகளில் இதனைப்பற்றி நிறைய தகவல்களை உங்களுக்கு சொல்லுகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: