வணக்கம் நண்பர்களே!
ஒரு நாள் பரிகாரம் செய்தவுடன் அனைத்தும் கிடைத்துவிடும் என்று எதிர்பார்ப்பது தவறான கருத்தாகும். படிப்படியாக தான் முன்னேற்றம் என்பது கிடைக்கும். ஒரு நாள் செய்தவுடன் அது நடைபெறவில்லை என்று நாம் அதனை விட்டுவிட்டு வந்துவிடகூடாது. நமது கர்மாவை பொருத்து தான் பரிகாரம் வேலை செய்வதும்.
ஆன்மீகத்தைப்பொருத்தவரை அதிக முயற்சிகள் செய்யவேண்டும். ஒரு நாளில் நடந்துவிட்டால் கடவுளை நீங்கள் எப்படி மதிப்பீர்கள் என்பது தெரியும். அப்படி இருந்தும் கடவுள் உங்களின் மேல் அருளை கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்.
கடுமையான தவம் இருக்கும்பொழுது நம்மீது மட்டும அதிக அக்கறை எடுத்துக்கொண்டு கடவுள் நமக்காக செய்கிறது. உங்களின் முயற்சியை நீங்கள் எடுக்கவேண்டும் அதே நேரத்தில் கடவுளின் ஆசியும் இருக்கவேண்டும். கடவுளை கும்பிடாதவனும் முயற்சி எடுக்கிறான். கடவுளை கும்பிடுகிறவனும் முயற்சி எடுக்கிறான். இருவருக்கும் என்ன வித்தியாசம் இருக்கும் என்று மனது நினைக்க தோன்றும்.
கடவுளை கும்பிடாதவன் தன் முயற்சியால் வாழ்நாளில் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்தால் கடவுளை கும்பிடுகிறவன் தன் முயற்சியால் ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்கமுடியும். தன் முயற்சி மற்றும் கடவுளின் முழு ஆசியும் சேரும்பொழுது கி்டைக்கும் நன்மை பல மடங்காக உயரும்.
நீங்கள் கடவுள் மேல் நம்பிக்கையுடன் இருங்கள். அந்த நம்பிக்கை ஒரு நேரத்திலும் சந்தேகப்படகூடாது. கண்டிப்பாக ஒரு நாள் நீங்கள் மிகப்பெரிய எல்லையை தொடமுடியும். எப்பொழும் கடவுளின் சிந்தனை இருக்கும்பொழுது நீங்கள் மிகப்பெரிய வெற்றியாளராக கண்டிப்பாக வரமுடியும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
ஓம் நமோ நாராயணா
Post a Comment