வணக்கம் நண்பர்களே!
நமது ஊர்களின் உள்ள கோவில்களின் பால்குடம் எடுப்பது என்பது ஒரு வழக்கம். அம்மன் அல்லது பிறதெய்வங்களுக்கு அபிஷேகத்திற்க்கு தேவையான பாலை குடங்களில் வைத்து அதனை ஊர்களின் வீதி வழியாக வந்து சம்பந்தப்பட்ட கோவிலின் மூலவருக்கு அபிஷேகம் செய்வார்கள்.
கிராமங்கள் மற்றும் நகரங்களில் கூட இந்த வழிபாடு இருக்கிறது. பெரும்பாலும் பக்தர்களின் வேண்டுதல்களை தெய்வங்கள் நிறைவேற்றிக்கொடுத்தவுடன் அதற்கு மரியாதையாக இதனை செய்வது உண்டு. தெய்வங்கள் தன் வேண்டுதலை செவிகொடுத்து கேட்டு நிறைவேற்றிக்கொடுத்தவுடன் பக்தர்கள் அந்த தெய்வத்திற்க்கு இப்படி பால்குடம் எடுத்து வேண்டிதலை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.
எல்லா ஊர்களிலும் இது வழக்கத்தில் இருக்கிறது. நீங்களும் இந்த மாதிரி வேண்டுதலை வைத்து நிறைவேற்றிக்கொள்ளுங்கள். வேண்டுதல் வைக்கும்பொழுதே அம்மா உனக்கு பால்குடம் எடுக்கிறேன் எனது வேண்டுதலை நிறைவேற்றி கொடு என்று மனதார பிராத்தனை செய்தால் கண்டிப்பாக நிறைவேற்றிகொடுக்கும்.
ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள கோவிலில் வேண்டுதலை வைத்துக்கொள்ளுங்கள். அந்த கோவிலில் இப்படிப்பட்ட விழா நடக்கிறதா என்று பார்த்து வேண்டிக்கொள்வது நல்லது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment