வணக்கம் நண்பர்களே!
நீங்கள் கூட்டாக தொழில் செய்வதாக இருந்தால் அவர்களின் ராசியை வைத்துக்கொண்டு நாம் அவர்களோடு சேர்ந்து தொழில் செய்யலாமா அல்லது வேண்டாமா என்று முடிவு எடுத்துக்கொள்ளலாம். உங்களின் நண்பர்களிடம் உங்களின் ஜாதகத்தை கொடுங்கள் என்று கேட்டால் அவர்கள் ஏதாவது நினைப்பார்கள். அவர்களின் ராசியை கேட்டால் உடனே சொல்லிவிடுவார்கள். நாம் அந்த ராசியை வைத்தே அவர்களின் பழக்கவழக்கம் மற்றும் குணம் என்ன என்று கண்டுக்கொள்ளலாம்.
முதலில் மேஷராசியை தொழில் கூட்டாளியாக வைத்தால் என்ன நடக்கும் என்பதை சொல்லிவிடுகிறேன். பிறகு ஒவ்வொரு ராசியையும் நாம் பார்க்கலாம்.
மேஷம் ராசியை நாம் எந்த தொழிலுக்கு கூட்டு வைத்தாலும் அவர்களின் முன்கோபத்தால் நமது தொழில் பிரச்சினையை சந்திக்கும். அனைத்தையும் அவர்கள் மிக வேகமாக செய்தாலும் அவர்களின் முன்கோபம் தொழிலில் பிரச்சினையை கொடுத்துவிடும்.
பொதுவாக தொழில் செய்பவர்களுக்கு கோபம் என்பது வரக்கூடாது. மேஷராசியை உடையவர்கள் கோபத்தை காட்டிவிடுவார்கள். அவர்களின் கோபத்தை வாடிக்கையாளரிடம் காட்டிவிடுவார்கள். மேஷ ராசியை பொருத்தவரை அடுத்தவர்களுக்கு பயப்படமாட்டார்கள்.
பொதுவாக தொழில் செய்பவர்களுக்கு கோபம் என்பது வரக்கூடாது. மேஷராசியை உடையவர்கள் கோபத்தை காட்டிவிடுவார்கள். அவர்களின் கோபத்தை வாடிக்கையாளரிடம் காட்டிவிடுவார்கள். மேஷ ராசியை பொருத்தவரை அடுத்தவர்களுக்கு பயப்படமாட்டார்கள்.
பெண்கள் மீதும் இவர்கள் அதிக மோகம் கொள்வார்கள். காமத்திற்க்கு என்று அதிகமாக செலவு செய்வார்கள். எந்த ஒரு வேலையும் சரியாக செய்யவேண்டும் என்றும் நினைப்பார்கள். வியாபாரத்தில் ஒரு சில நேரத்தில் சில விசயங்களை விட்டுக்கொடுத்து செல்லவேண்டும். அப்பொழுது தான் வியாபாரம் செய்யமுடியும் ஆனால் இவர்களால் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அவசரபுத்தி என்பது ஒரு நல்ல விசயம் என்றாலும் எல்லா நேரத்திலும் அவசரபுத்தி உதவாது பிரச்சினையை ஏற்படுத்திவிடும். இவர்களுக்கு அனைத்திலும் அவசரபுத்தி தான் இருக்கும். இதனை வைத்துக்கொண்டு இவர்களை தொழில் கூட்டாளியாக்கவேண்டுமா அல்லது வேண்டாமா என்று முடிவை எடுத்துக்கொள்ளுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
Sir,
arisiyai thanneril nanaithu vaalai ilayil parapa venduma, allathu nanaikamal parapa venduma?
Poojai mudinthavudan antha arisi, maavilaku aagiyavaikalai enna seiya vendum?
Thanks a lot for giving this useful and important information sir.
Post a Comment