Followers

Tuesday, April 8, 2014

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    ஞாயிற்றுகிழமை அன்று வழக்கம்போல் மாலை நேரத்தில் பெசன்ட்நகர் பீச் பக்கம் சென்று இருந்தேன். அப்பொழுது ஒரு கிளிசோதிடம் சொல்லுபவர் என்னை பார்த்து சார் சோதிடம் பார்க்கிறீர்களா என்று கேட்டார். எவ்வளவு பணம் என்று கேட்டேன். இருபத்தியோரு ரூபாய் என்று சொன்னார். சரி என்று பணத்தை எடுத்துக்கொடுத்து சொல்லுங்கள் என்று கேட்டேன்.

மணலில் விரிப்பை போட்டு கிளி பெட்டியை வைத்தார். யாருக்கு பார்க்கவேண்டும் என்று கேட்டார். மக்களின் எண்ணம் போல் தான் எனக்கும் இருக்கும் சோதிடர்களேயே திண்டாட வைப்பதுபோல் கேள்வி கேட்போம் அல்லவா. நான் மலேசியா விமானம் காணாமல் போய்விட்டது அதன் நிலை என்ன என்று கிளியிடம் கேட்டுச்சொல்லுங்கள் என்றேன்.

அவர் கிளியிடம் மலேசியா விமானத்திற்க்கு என்ன நடந்தது என்று சாருக்கு ஒரு சீட்டு எடுத்துக்கொடு என்றார். கிளி ஒரு சீட்டை எடுத்துக்கொடுத்தது.கடல்கன்னி படம் போட்ட ஒரு சீட்டை எடுத்துக்கொடுத்தது. 

கிளி சோதிடர் பலனை சொன்னார், அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கி உள்ளது. அது விழுந்த இடத்திற்க்கு அருகில் அதாவது ஐம்பது அடி தூரத்திற்க்கு ஒரு சின்ன தீவு ஒன்று இருக்கிறது. அந்த தீவும் பெரிய தீவு கிடையாது. சிறிய நூறு அடி கூட இருக்காது. விமானத்தில் இருந்து இரண்டு பேர் உயிர் தப்பி அந்த தீவில் கரை ஏறியுள்ளனர். அவர்களின் நிலையும் மோசமாகிவிட்டது. 

விமானத்திற்க்கு பெரிய பாதிப்பு இல்லை. இரண்டு இறக்கையும் சேதம் அடைந்து இருக்கிறது. விமானத்தின் முகப்பு வடக்கு நோக்கி இருக்கிறது. என்று பலனை சொன்னார். கொடுத்த பணத்திற்க்கு திருப்தியாக பலனை சொன்னார்.

கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து தேடியும் கிடைக்காத விமானத்தைப்பற்றிய தகவலை இருபத்தியோரு ரூபாய் பணம் கொடுத்து தெரிந்துக்கொண்டேன் பார்த்தீர்களா. சாட்டிலைட்க்கு கூட தெரியாத விமானத்தை கிளி கண்டுபிடிக்கிறது. 

நண்பர்களே கண்டுபிடிக்கமுடியாத ஒரு சில வேலைகளை ஆன்மீகம் துணைக்கொண்டு கண்டுபிடிக்க முடியும். என்ன செய்வது கருவியை நம்புகிறவன் கடவுளை நம்பமாட்டேன்கிறான். 

கடைசியாக அந்த கடல்கன்னி படத்தை பார்த்தேன். அந்த கடல்கன்னி நமது அம்மன்போல் உள்ளது.

நம்பினால் நம்புங்கள்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

nallur parames said...

Enakku thalai suththuthu!

astrosenthilkumar.blogspot.in said...

மலேசிய விமானம் பற்றிய அடியேனும் சொல்லி இருந்தேன் ..முகநூலில் கவனிக்கவும் ..அதுசரி நம்ம அறிவுத்திறன் கொண்ட நண்பர்கள் ஏதோ ரஷ்ய பத்திரிகை விமானம் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் கடத்தி போனார்கள் என்று ஜோதிடரா இருந்து கொண்டு ஜோதிடத்தை நக்கலாய் சொன்னார்கள் அது என்ன ஆட்சு ???