Followers

Wednesday, April 2, 2014

தொழில் கூட்டாளி



ணக்கம் ண்பர்களே!
                    ஒரு நண்பர் என்னிடம் போன் செய்து நான் ஒரு தொழில் செய்துக்கொண்டிருக்கிறேன் எனது தொழில் ஒருவரை தொழில் கூட்டாளியாக தேர்ந்தெடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன். யாரை நான் தேர்ந்தெடுக்கலாம் என்று கேட்டார். அவரிடம் உங்களின் ஜாதகத்தை பார்த்து அதில் என்ன இருக்கின்றது என்று தெரிந்தால் சொல்லலாம் என்று சொன்னேன்.

அவர் சார் எனக்கு ஜாதகம் இல்லை. என்னோடு ஒரு சில நண்பர்கள் இருக்கின்றனர் அவர்களின் ராசிகளைப்பற்றி எனக்கு தெரியும். ராசியை வைத்தே அவரைப்பற்றி ஒரளவுக்கு தெரியும் அல்லவா அதனால் நீங்கள் சொல்லுங்கள் அவர்களை நான் தேர்ந்தெடுக்கிறேன் என்று சொன்னார். சரி இவ்வளவு நம்பிக்கையுடன் என்னை நாடி கேட்கிறார் அவருக்கும் என்னால் முடிந்த உதவியை செய்யவேண்டும் என்று சொன்னேன்.

தொழிலில் கொடிகட்டி பரப்பவர்கள் யார் என்றால் மகரராசிக்காரர்களாக தான் இருப்பார்கள். காலசக்கரத்தில் பத்தாவது வீடாக வருவதால் இவர்கள் தொழில் செய்வதில் கில்லாடிக்கள் என்றே சொல்லலாம். இவர்களை பொறுத்தவரை உழைத்துக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் இளமையில் வறுமையில் இருந்தாலும் பாதி வயதிற்க்கு மேல் நல்ல முன்னேற்றத்தை கண்டுவிடுவார்கள்.

இன்றைக்கு இருக்கும் உலக பெரிய பணக்காரர்கள் லிஸ்டில் இருப்பவர்கள் இந்த ராசிகாரர்கள் தான். இவர்களை நீங்கள் தொழில் கூட்டாளியாக சேர்த்துக்கொண்டால் நல்லது என்று சொன்னேன்.தொழில் நுணுக்கங்கள் நன்றாக இவர்களுக்கு தெரியும். அதே நேரத்தில் கொஞ்சம் விட்டால் இவர்கள் தனியாகவே தொழில் தொடங்கி வெற்றிபெற்றுவிடுவார்கள். தொழில் நுணுக்கங்களை தெரிந்தவர்களை தொழில் கூட்டாளியாக நீங்கள் வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னேன்.

மகரராசிக்கு என்று தனிக்குணம் என்ன என்றால் நட்புக்கு நல்ல உயிர்க்கொடுப்பார்கள். அதே நேரத்தில் கொஞ்சம் சண்டை வந்துவிட்டால் நம்மை அழிக்காமல் விடமாட்டார்கள். அதில் கொஞ்சம் கவனம் தேவை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

4 comments:

KJ said...

sir, This suits only for magara rasi or for magara lagnam also?

nallur parames said...

Sir gayathri mandhira payirchi eppothu?

rajeshsubbu said...

வணக்கம் KJ மகரராசியாக இருந்தால் நல்லது. நன்றி

rajeshsubbu said...

வணக்கம் nallur parames வளர்பிறை முடியும்வரை நீங்கள் ஆரம்பிக்கலாம். நன்றி