வணக்கம் நண்பர்களே!
பல வருடங்களாக எழுதிக்கொண்டு இருக்கிறேன். பல வருடங்களாக தொடர்ந்து படிக்கும் நண்பர்களும் இருக்கின்றனர். ஒரு சிலர் புதியவர்களும் வந்து இருப்பார்க்கள் அவர்களும் அனைத்து பதிவுகளையும் படித்து இருப்பீர்கள். மொத்தத்தில் இந்த பதிவுகளை எல்லாம் படிக்கும் நண்பர்களுக்கு ஜாதககதம்பத்தைப்பற்றி ஒரளவு என்ன என்று தெரியும்.
நண்பர்கள் மட்டும் அல்லாமல் சாமியார்கள் படிக்கிறார்கள் என்பதும் தெரிந்த ஒன்று. பெரிய ஆன்மீகவாதிகளே ஜாதககதம்பத்தை படிக்கிறார்கள் என்று தெரியவரும்பொழுது ஒரு சின்ன சந்தோஷத்தை எனக்கு கொடுக்கிறது.
இத்தனை வருடங்கள் படிக்கும் அனைவருக்கும் மற்றும் புதியவர்களுக்கும் நான் கேட்கும் கேள்வி ஒன்று இருக்கிறது. இதுவரை அதிகமாக நான் கேள்வி கேட்டதில்லை. இந்த நேரத்தில் இந்த கேள்வியை கேட்டால் எனக்கு ஒரு உதவியாக இருக்கும் என்று எண்ணி கேள்வியை கேட்கிறேன்.
ஜாதககதம்பம் சொல்லும் ஆன்மீகத்தைப்பற்றி உங்களுக்கு தெரிந்ததை எனக்கு எழுதி அனுப்புங்கள்.
ஆன்மீகம் என்றால் அதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். ஜாதககதம்பத்தில் ஒரு கட்டுப்பாடும் கிடையாது. என்னைப்பற்றி ஒழிவு மறைவு இன்றி சொல்லியுள்ளேன்.
அதில் ஒரு சில விசயங்களை சொல்லுகிறேன்.
எனது பூர்வபுண்ணியத்தைப்பற்றி சொல்லியுள்ளேன்.
நான் அசைவம் சாப்பிடுவேன் என்று சொல்லியுள்ளேன்.
சினிமா பார்த்தை சொல்லியுள்ளேன்.
ஊர் சுற்றுவதை சொல்லியுள்ளேன்.
ஒரு சாதாரணமான மனிதன் செய்யும் அனைத்தையும் செய்துக்கொண்டு ஆன்மீகவாதி செய்யும் வேலைகளை செய்கிறேன் என்று பார்க்கும்பொழுது உங்களுக்கு இது ஆன்மீகமாக எப்படி இருக்கமுடியும் என்றும் நினைக்கதோன்றும் அல்லது இது ஆன்மீகம் இல்லை என்றும் நினைக்கதோன்றும். எதனை நீங்கள் நினைக்கிறீர்களோ அதனை அப்படியே எனக்கு எழுதி அனுப்புங்கள். நான் கோபம் கொள்ளமாட்டேன். ஜாதககதம்பத்தில் உள்ளது குப்பை என்று எழுதினாலும் பரவாயில்லை ஆனால் எழுதி அனுப்புங்கள்.
என்னை நேரில் பல நண்பர்கள் சந்தித்து உள்ளனர். அவர்கள் என்னை பார்த்து நீங்கள் தான் ராஜேஷ்சுப்புவா என்று கேட்டுள்ளனர். எனது தோற்றமும் சாதாரணமாக தான் இருக்கும். ஆன்மீகவாதிக்கு உள்ள தோற்றம் மற்றும் அவர்களின் தகுதி என்று வரையத்து வைத்திருக்கும் எந்த ஒரு சுவடும் என்னிடம் இருப்பதில்லை.
இத்தனை இருந்தும் என்னை நம்பி பல பேர்கள் வருகின்றனர் அவர்களுக்கு ஆன்மீகவழிகளில் நிறைய செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கின்றேன்.ஜாதககதம்பம் சொல்லும் ஆன்மீகம் எப்படிப்பட்டது என்பதை சொல்லுங்கள்.
காலம் எடுத்துக்கொண்டு சொல்லுங்கள். பரவாயில்லை உடனே சொல்லவேண்டும் என்பது கிடையாது. நன்றாக உங்களின் அறிவை பயன்படுத்தி எனக்கு எழுதி அனுப்புங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
3 comments:
அய்யா
எளிய முறையில் பரிகாரம் சொல்கிறிர்கள்.மக்கள் நன்மை பெறவேண்டும் என்ற்று பல பதிவுகள் கொடுத்துவுள்ளீர்கள். நாங்கள் அதன்படி நடந்தால் நிச்சயம் நல்லது கிடைக்கும்
வணக்கம் Kalai Rajan தங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி.
வணக்கம் ஜயா.
புர்வ புண்ணியத்தை பற்றி தெளிவான
பதிவையும் முக்கிய பலன்களும். சதாரண
மக்களும் அறிந்துகெள்ளும் வகையில்
பதிவுகளை கெடுத்த குருவுக்கு . கோடிநன்றி. தமிழ்நாட்டு மக்களுக்கு "ஜாதக கதம்பம்" ஓரு வரப்பிரசாதம்.
நன்றி...
Post a Comment