வணக்கம் நண்பர்களே!
அன்னதானத்தைப்பற்றி இதுவரை எத்தனையோ ஆன்மீகவாதிகள் சொல்லி இருப்பார்கள். அதனை எல்லாம் நீங்கள் செய்து வந்து இருப்பீர்கள். பழமையான ஒரு அன்னதானத்தை உங்களுக்கு சொல்லபோகிறேன் அதில் இருந்து நீங்களே உங்களை சோதனை செய்துக்கொள்ளலாம் நீங்கள் அதிர்ஷ்டசாலியா அல்லது துர்அதிர்ஷ்டசாலியா என்று தெரிந்துக்கொள்ளமுடியும்.
துர்அதிர்ஷ்டசாலியா என்றால் உடனே காரியத்தில் இறங்கிவிடுங்கள். அந்த காலத்தில் சிவனடியார்கள் ஏழைகளின் வீட்டிற்க்கு சென்று சாப்பிடுவார்கள். ஒவ்வொரு ஊரிலும் பல பணக்காரர்கள் தவம் கிடைப்பார்கள் சிவனடியார்கள் நம்ம வீட்டிற்க்கு வந்து உணவு அருந்திவிட்டு செல்லமாட்டார என்று பார்த்துக்கொண்டு இருக்கையில் ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாத வீட்டிற்க்கு சென்று உணவை கேட்பார்கள். அந்த ஏழையும் அவர்களின் கையில் கிடைத்த உணவை கொடுத்து சாப்பிடச்சொல்லுவார்கள்.
சிவனடியார்கள் சந்தோஷத்தாேடு அதனை சாப்பிட்டுவிட்டு அவர்களுக்கு ஆசி வழங்கிவிட்டு சென்றுவிடுவார்கள்.சிவனடியார்களிடம் இருக்கும் சக்தி அந்த வீட்டில் இருந்த அனைத்து தரித்திரத்தையும் விரட்டிவிடும். பல ஜென்மங்களில் இருந்து வந்த கர்மா அனைத்தும் விலகிவிடும். ஒரு கோடி ஆத்மாக்களுக்கு செய்யும் அன்னதானம் ஒரு சாதுவிற்க்கு நாம் செய்யும் அன்னதானத்திற்க்கு சமம்.
இப்பொழுது உங்களுக்கு தெரிந்து இருக்கும். நீங்கள் அதிர்ஷ்டசாலியா அல்லது துர்அதிர்ஷ்டசாலியா என்று புரிந்து இருக்கும். நம்ம ஆட்கள் நிறைய கேள்விகளை கேட்பார்கள் அவர்களுக்காக புரிகிற மாதிரி கீழே விளக்கி எழுதுகிறேன் படித்துக்கொள்ளுங்கள்.
உங்களின் வீட்டிற்க்கு ஆன்மீகவாதியை அழைத்து சாப்பாடு போடவேண்டும். குறிப்பாக அவர்களுக்கு சாப்பாடு தான் போடவேண்டும். கடையில் இருந்து சாப்பாடு வாங்கி போடாதீர்கள். உங்களின் வீட்டில் அமர்ந்து அவர்கள் சாப்பிடவேண்டும். சாப்பாடு போடும் நேரத்தில் உங்களின் குடும்ப உறுப்பினர்கள் அங்கு இருக்கவேண்டும்.
ஒரு ஆன்மீகவாதிக்கு மட்டும் சாப்பாடு போட்டுவிட்டால் அந்த ஆன்மீகவாதி நினைத்தால் கூட உங்களுக்கு வரும் செல்வத்தை தடைசெய்யமுடியாது. ஆன்மீகவாதிகளிடம் இருக்கும் சக்தி உங்களுக்கு மிக உயர்ந்த ஒரு ஆசியை வழங்குகிறது.
உங்களிடம் இருக்கும் உணவை இன்முகத்தோடு அவர்களுக்கு நீங்கள் போடும்பொழுது அவர்களி்ன் முழுசக்தியும் உங்களுக்கு கிடைக்கும். இதனை நீங்கள் செய்தால் கோவிலுக்கு கூட போகதேவையில்லை.
இதில் என்ன ஒரு விஷேசம் என்றால் சம்பந்தப்பட்ட ஆன்மீகவாதி உங்களை வாழ்த்துவதைவிட அவர்களிடம் இருக்கும் சக்தி தான் உங்களை வாழ்த்தும்.எத்தனையே ஆன்மீகம் சம்பந்தப்பட்ட செயலில் நீங்கள் இறங்கி இருப்பீர்கள். இதனை நீங்கள் செய்தது உண்டா? செய்யவில்லை என்றால் உடனே செய்யுங்கள்.
ஆன்மீகவாதி என்று நினைத்து என்னை கூப்பிடாதீர்கள். நான் சோதிடக்காரன். உங்களின் ஊரில் இருக்கும் ஆன்மீகவாதிகளை கூப்பிட்டு சாப்பாட்டை போடுங்கள். செல்வ வளம் உங்களின் வீட்டின் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும்.
எதிலும் முன்னேற்றம் இல்லை அனைத்தும் தடைகள் தான் இருக்கிறது என்று நினைப்பவர்கள் உடனே இதனை செய்து பாருங்கள். அதிர்ஷ்ட காத்து உங்களை நோக்கி வீசும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
Romba sulapama irukke.
Post a Comment