Followers

Wednesday, April 9, 2014

அன்னதானம்


வணக்கம் நண்பர்களே!
                    நிறைய அன்னதானங்களை செய்யுங்கள் என்று நமது மதத்தில் சொல்லுவார்கள். இதற்க்கு காரணம் என்ன என்று பார்த்தால் அதிலும் நமது மக்கள் ஒரு உள்குத்து வைத்து தான் செய்வார்கள் என்பது புரியும். அப்படி என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.

ஒரு மனிதனின் உடலுக்கு என்று நாம் சாப்பாடு போடும்பொழுது அவனின் ஆத்மா அவனை அறியாமலே சாப்பாடு போடுகிறவனை வாழ்த்தும். அவனின் ஆத்மாவின் ஆசியை பெறுவதற்க்கு தான் மனிதன் இப்படி அன்னதானம் செய்கிறான். மனிதனின் ஆத்மா ஆசி என்பது மிகமுக்கியமாக கருதப்படுகிறது. 

ஒவ்வொரு மனிதனிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது என்பதை மறைமுகமாக மதத்தில் சொல்லியுள்ளார்கள். அதனை நாம் கடைபிடித்து வருகிறோம். ஒவ்வொரு மனிதனுக்கும் நாம் செய்யும் உதவி எல்லாம் ஆத்மாவின் ஆசியை பெறுவதற்க்கு மட்டுமே.

கலியுகத்தில் மக்களுக்கு அன்னதானம் போட்டால் என்ன செய்கிறார்கள் என்றால் இவன் இனிமேல் அன்னதானம் போடகூடாத அளவிற்க்கு சாபம் போட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். சாப்பாடு இல்லாதவனுக்கு அன்னதானம் செய்யவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Sappittu vittu saapamittal palikkuma?