வணக்கம் நண்பர்களே!
குலதெய்வ வழிபாட்டில் பச்சை பரப்புதலைப்பற்றி சொல்லிருந்தேன் இந்த வழிபாட்டில் அதிகமான கேள்விகளை நமது நண்பர்கள் கேட்கிறார்கள். அதிக சந்தேகமும் எழும்புகிறது. அனைவருக்கும் புரியும் விதத்தில் மறுபதிப்பாக இதனை வெளியிடுகிறேன்.
உங்களின் குலதெய்வத்தை வணங்குவது உங்களின் குலதெய்வ கோவிலாக இருந்தாலும் வீட்டில் வைத்து அந்த தெய்வத்திற்க்கு ஒரு பூஜை செய்யும்பொழுது மட்டுமே குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்க செய்யும்.
உங்களின் வீட்டில் உங்களின் குலதெய்வத்திற்க்கு ஏற்ற நாளில் அதாவது உங்களின் குலதெய்வத்திற்க்கு உகந்த நாளில் அல்லது பெளர்ணமி அமாவாசை நாளில் இந்த வழிபாட்டை நீங்கள் செய்யலாம்
பூஜையறையில் விளக்கை ஏற்றி வைத்து அதற்கு முன்பு வாழை இலையை போடுங்கள். வாழை இலையில் தண்ணீரில் நனைத்த பச்சை அரிசியை பரப்புங்கள். பச்சை அரிசியை கொஞ்சமாக எடுத்து இலையில் பரப்பினால் போதும் அதிகமாக எடுத்து பரப்ப வேண்டியதில்லை. அதன் மீது ஐந்து உருண்டை மாவிளக்கை வையுங்கள் அதன் மீது தீபத்தை ஏற்றுங்கள். பழங்களை வையுங்கள்.
உங்களின் குலதெய்வத்திற்க்கு உகந்த பலகாரங்களை படைக்கலாம். எந்த தெய்வமாக இருந்தாலும் வடை பாயசம் வைக்கலாம். பலகாரங்கள் மற்றும் வடை பாயசம் எல்லாம் அரிசியை பரப்பிய இலையில் வைக்காமல் தனியாக ஒரத்தில் வைக்கலாம். தனி பாத்திரத்தில் கூட வைக்கலாம்.
ஊதுவத்தி மற்றும் சாம்பிராணியை ஏற்றி வையுங்கள். தீபாராதனை காட்டுங்கள். தீபாராதனை காட்டும் பொழுது உங்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் மனமுருகி வேண்டி உங்களின் கோரிக்கைகளை வைக்கலாம்.
படைத்த அனைத்து பொருட்களையும் நீங்கள் மற்றும் உங்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் சாப்பிடலாம். அரிசியை வேறு ஏதாவது காரியத்திற்க்கு கூட பயன்படுத்திக்கொள்ளலாம்.
பூர்வபுண்ணியம் பாதிக்கப்பட்டவர்கள் கூட இந்த வழிபாட்டை கடைபிடித்து வரும்பொழுது விரைவில் குலதெய்வத்தின் அருளை பெறமுடியும். இந்த வழிப்பாட்டை முடிந்தளவு உங்களின் அருகாமையில் மற்றும் உங்களின் உறவினர்களுக்கு சொல்லி கொடுங்கள். நாம் பயன்பெறுவது போல் அவர்களும் பயன்பெறுவார்கள்.
ஒவ்வொருவரும் இந்த வழிபாட்டை கண்டிப்பாக மேற்க்கொள்ளுங்கள். அனைத்து பொருட்களும் நீங்கள் சாப்பிட தான் போகின்றீர்கள். எதுவும் வீண் போகபோவதில்லை. குறைந்த செலவில் நிறைந்த வளத்தை பெறமுடியும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
Thank you very much sir. This is really very useful information.
Post a Comment