Followers

Sunday, April 20, 2014

கேள்வி & பதில்


ணக்கம் ண்பர்களே!
                   நண்பர் ஆண்டனி சீரடி சாய்பாபாவைப்பற்றி கேட்டுருந்தார். அவருக்கு பதில் அளிக்கும் விதமாக உங்களுக்கும் ஒரு சில தகவலை தருகிறேன்.

சீரடி பாபாவை நான் மனதார பிராத்தனை செய்து இருக்கிறேன். நல்ல மகான். நம் ஆட்கள் எப்படிப்பட்ட மகானையும்  காலி செய்துவிடுவார்கள் அல்லவா. அவர்கள் சொன்ன கருத்தை பரப்புவதை விட்டுவிட்டு அவருக்கு ஊரு முழுவதும் கோவிலை கட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.

ஒவ்வொரு மகானுக்கும் இதே கதி தான் ஏற்படும். வள்ளலார், சீரடி பாபா போன்றவர்கள் இறைவன் ஒளிவடிவத்தில் உள்ளார். அவரை வணங்குங்கள் என்று சொல்வார்கள். நம்ம ஆட்கள் இரண்டு பேருக்கும் சிலை வைத்து வணங்க சொல்லி கொடுத்துவிட்டார்கள்.

என்ன செய்வது என்ன தான் ஆயிரம் மகான் அவதரித்தாலும் அவர்கள் சொல்லுவதை யாரும் கேட்கபோவதில்லை. அவர்களுக்கு சிலை வைப்பது தான் நமது வேலையாக இருக்கிறது. அனைத்து மக்களிடமும் இது இருக்கிறது.

அவர்கள் சொன்ன கருத்தை புத்தகமாக அல்லது சொற்பொழிவாக மக்களிடம் கொண்டு செல்லலாம் அதனை விட்டுவிட்டு கோவிலை கட்டி அவருக்கு சிலையை வைத்து இப்பேர்பட்ட மகானுக்கு நான் கோவில் கட்டினேன் என்றால் நான் யாராக இருக்கமுடியும் என்று கேள்வி கேட்டுக்கொண்டு இருப்பார்கள்.எல்லாம் கலியுகம்

பொதுவாக மகான்கள் நம்மை போல் தான் இருப்பார்கள். அவர்களை சுற்றி ஒளிவட்டம் எல்லாம் வராது. அவர்களிடம் நாம் செல்லும்பொழுது நமது மனது அமைதி அடையும். கேள்வி கேட்க தோன்றாது. அவர்களை நாம் சந்தித்துவிட்டு வந்த பிறகு நமது வாழ்க்கையில் அற்புதம் நடைபெறும். .

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

இராய செல்லப்பா said...

நீங்கள் சொல்வது சரியே. மகான்களின் கொள்கைகளை ஓரளவாவது வாழ்க்கையில் கடைபிடிக்க முடியாதவர்கள், அவர்களுக்குக் கோவில் கட்டிச் சூடம் ஏற்றி மாலை போட்டு ஆடம்பரமாக விழாக்கள் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. மனம் குவிந்த தியானமே ஷீரடி சாய்பாபா விரும்புவது. அவரது படத்தைப் பார்த்தபடிஇருந்தாலே மனம் ஒருமுகப்படுவதை நான் அறிவேன்.