Followers

Wednesday, April 9, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    ஆன்மீக அனுபவங்களை படித்துவிட்டு நமது நண்பர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். உடலை எரிக்கும் வெட்டியான் நன்றாக இருப்பதில்லை. நீங்கள் எப்படி சொல்லுகின்றீர்கள் என்று கேட்டார். 

தான் சமைக்கும் சமையலை கூட பெரிய உணவங்களில் வேலை செய்யும் சமையல்காரர்கள் சுவைப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு விதியை ஆண்டவன் வைத்திருக்கிறான். இந்து மதத்தில் மட்டும் ஆத்மா வேறு உடல் வேறு என்று வைத்திருக்கிறார்கள். நாம் செய்யும் அனைத்து செயலும் ஆத்மாவிற்க்காக தான் என்று தெளிவாக விளக்கியுள்ளேன். 

இறப்பவர்களின் உடலை விட்டு ஆத்மா உடனே செல்லாது. உடல் எரிக்கும் இடத்திற்க்கு ஆத்மா செல்லாது. ஆத்மாவை முச்சந்தியிலேயே நிறுத்திவிடுவார்கள் என்றும் பழைய பதிவில் சொல்லியுள்ளேன். எரிக்கும் உடலை ஆத்மா பார்த்தால் அது கோபபட்டுவிடும். கோரமாக மாறிவிடும் என்று நமது மதத்தில் சொல்லியுள்ளார்கள். 

நாம் செய்யும் அனைத்து காரியங்களும் ஆத்மாவிற்க்கு மட்டுமே செய்கிறோம். உடலுக்கு என்று தனியாக காரியங்களை அவர்களின் குடும்பத்தார்கள் மட்டும் செய்வார்கள். ஆத்மா சாந்தி அடையவேண்டும் என்று நாம் பிராத்தனை செய்வோம். உடலுக்கு அவர்களின் உறவுக்காரர்கள் மட்டும் செய்வார்கள். இதனைப்பற்றி நிறைய விசயங்களை ஒரு நாளில் எழுதுகிறேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

antonyarun said...

Dear
thanks for your explanation
Antony