Followers

Thursday, June 5, 2014

ஆன்மீக அனுபவங்கள் 166


வணக்கம் நண்பர்களே!
                    விழிப்புணர்வோடு இருக்கவேண்டும் என்று சொல்லிருந்தேன். அதனைப்பற்றி எழுதிவிடுகிறேன். இல்லறத்தில் இருப்பவர்கள் அனைவரும் வாழ்வில் கடைசியில் மோட்சத்தை அடையலாம் ஆனால் யாரும் அதனை அடையவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

ஒரு இல்லறத்தான் என்பவன் தன் மனைவியை காப்பாற்றினால் போதும் அவன் மோட்சத்தை அடைவான் என்பார்கள். உண்மையில் அனைவரும் மனைவியை காப்பாற்றிக்கொண்டு வருகின்றார்கள் ஆனால் அவர்கள் மோட்சத்தை அடையவில்லை. காரணம் ஒன்று தான் தன் மனைவியை அவர்கள் நேசிக்கவில்லை. என்னப்பா நீ இப்படி சொல்லுகிறாய் என்று கேட்க தோன்றும். 

ஆண்கள் தன் மனைவியிடம் செய்யவேண்டியதை வேசியிடம் செய்வான். வேசியிடம் செய்யவேண்டியதை மனைவியிடம் செய்வான் என்று எனது நண்பர்களிடம் நான் சொல்லுவேன். உள்ளே சென்று சொல்லவேண்டும் என்றால் மனைவியை கொஞ்ச மாட்டான் வேசியை கொஞ்சுவான்.

பொதுவாக மக்களிடம் இருக்கும் குணத்தை சொல்லுகிறேன். முதலில் ஒன்றை பார்த்தால் விரும்பி பார்ப்பார்கள் அதன் பிறகு அதனை பார்க்க மாட்டார்கள். மக்கள் அனைவரும் குருடர்கள். உங்களின் வீட்டில் ஒரு பொருள் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அந்த பொருளை வாங்கி வந்தவுடன் நன்றாக பார்ப்பீர்கள் இரண்டாவது நாளும் பார்ப்பீர்கள் மூன்றாவது நாளில் அதனை பார்க்கமாட்டீர்கள். அதனை உபயோகப்படுத்துவீர்கள் ஆனால் அதனை பார்க்காமலேயே உபயாேகப்படுத்துவீர்கள்.

ஒரு பைக் வாங்கியவுடன் ரசித்து முதல் நாளில் ஓட்டுவீர்கள். நாள் செல்ல செல்ல பைக் சாவியை கூட போடுவதற்க்கு நீங்கள் பார்ப்பதில்லை. சாவி போடும்பொழுது பிரச்சினை வந்தால் மட்டும் அந்த இடத்தை பார்ப்பீர்கள்.

ஒரு குழந்தையிடம் ஒரு பொம்மையை கொடுத்தால் அது மிகவும் மகிழ்ச்சியாக அதனை வைத்து விளையாடும் அதோடு உறவுகள் வைத்து விளையாடிக்கொண்டே இருக்கும் ஏன் அப்படி இருக்கின்றது அது இயல்பாக விழிப்புணர்வோடு இருக்கின்றது. இப்படிப்பட்ட மனநிலை இருந்தால் மட்டுமே நீங்கள் ஆன்மீகத்திற்க்கு செல்வதற்க்கு தகுதி உடையவர்.

இதனை ஏன் நான் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் இன்று அனைவருக்கும் கணவன் மனைவிக்குள் சண்டை அதிகம் வருகிறது. தன் மனைவியை ஒருவரும் முதல் நாள் பார்த்த பொழுது பார்த்த பார்வையை பிற்காலத்தில் பார்ப்பதில்லை. நான் சொல்லும் மனநிலை இருந்தால் முதல் நாள் பார்ப்பது போலவே உங்களின் மனைவியை கடைசி காலம் வரை பார்ப்பீர்கள்.

ஆன்மீகவாதியாக மாறிவிட்டால் நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்களின் மனைவியை புது பெண் போல் பார்ப்பீர்கள். முதல் நாள் பார்த்த பார்வைப்போல் உங்களின் பார்வை இருக்கும். ஆன்மீகவாதியாக இல்லை என்றால் வீட்டில் டிவி, பைக் இருப்பது போல் உங்களின் மனைவியும் ஒரு பொருளாக இருக்கும்.

அந்த பொருளை நீங்கள் பயன்படுத்துவீர்கள் அது உயிரற்ற பொருள்களாகவே இருக்கும் காரணம் மக்கள் கண் இருந்தும் குருடர்கள். உங்களின் வாழ்வு அற்புதமாக சந்தாேஷமாக இருக்கவேண்டும் என்றால் நீங்கள் ஆன்மீகவாழ்வை பின்பற்ற தொடங்குங்கள். விழிப்புணர்வோடு இருக்கும் வாழ்வாக மாற்றிக்கொள்ளுங்கள். ஆன்மீகத்தை பின்பற்றினால் உங்களின் இல்லறம் நன்றாக இருக்கும்.சண்டை சச்சரவு வராது. நித்தமும் சந்தோஷம் மட்டுமே.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Ippadi nadanthal illaram nallaramaaga irukkum