வணக்கம் நண்பர்களே!
ஒரு நபர் என்னிடம் சோதிடம் பார்க்க வந்தார். அவரின் மனைவிக்கு ஒரு சில நேரங்களில் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது என்று சொன்னார். அவரிடம் என்ன பிரச்சினை என்று கேட்டேன். அவளாகவே ஏதோ பேசிக்கொண்டு இருக்கிறாள் அதனை பார்த்து நான் பயந்துவிட்டேன் என்றார்.
அவர் நான் மருத்துவரிடம் காண்பித்துவிட்டேன். மருத்துவரும் சிகிச்சை அளித்து வரும் நாளில் நன்றாக இருக்கிறாள். பிறகு ஒரு சில நாட்களில் மறுபடியும் பிரசசினை வருகிறது என்றார்.
நான் அவரிடம் நீங்கள் என்ன வேலை செய்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் நான் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்துக்கொண்டிருக்கிறேன் என்றார். மேலும் அவர் நான் வேலை விசயமாக வெளியில் சென்றுவிடுவேன். அடிக்கடி வெளி மாநிலங்களுக்கு மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று வருவேன் என்றார்.
உங்களுக்கு குழந்தைகள் இருக்கின்றா என்று கேட்டேன். அவர் ஆமாம் இருக்கின்றது என்று சொன்னார். ஒரு குழந்தை உள்ளது. அதுவும் பள்ளிக்கு சென்று வருகிறது என்றார்.
ஒரு நபர் தனிமையில் இருந்தால் இப்படிப்பட்ட பிரச்சினை வருவது இயற்கை. மருத்துவரீதியாக இதனை தான் சொல்லுவார்கள். நாம் சோதிட ரீதியாக எதையாவது சொன்னால் தானே நம்மை சோதிடர் என்று ஏற்றுக்கொள்வார். அவரின் மனைவியின் ஜாதகத்தை வாங்கி பார்த்தால் சந்திரன் நல்ல நிலைமையில் இருக்கிறது. மற்ற கிரகங்களும் நல்ல நிலையில் தான் உள்ளது. பிறகு எப்படி சொல்லுவது.
நாமாக எதையாவது கதைவிட்டால் நாம் மாட்டிக்கொள்ளும் காலம் இது. ஏன் என்றால் அலுவலகத்தில் பொழுது போகவில்லை என்றால் நம்ம மக்கள் சோதிட பிளாக்கை தேடிப்பிடித்து படித்து தெரிந்துக்கொள்கிறார்கள். நாம் கதை விட முடியாது. சோதிடர் கதை விடுகிறார் என்று சொல்லுவிடுவார். அந்த நேரத்தில் அம்மன கை கொடுத்தது.
அவரின் நட்சத்திரத்தை பார்த்தேன் அப்பொழுது தான் எனக்கு அது பிடிப்பட்டது. அந்த பெண்ணின் நட்சத்திரம் அஸ்வினி. பொதுவாக அஸ்வினி நட்சத்திரத்தை கொண்டவர்களுக்கு தனிமையை ஏற்படுத்திவிடும். பிரிவும் தனிமையும் அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு இயற்கையாகவே கடவுள் கொடுத்த பிரச்சினை. இதனை சொல்லி அவரிடம் பணத்தை வாங்கினேன். பரிகாரம் என்ன என்று கேட்ககூடாது. அதனை வைத்து கொஞ்சம் காசு பார்க்கவேண்டும் அதன் பிறகு பரிகாரத்தை சொல்லிவிடுகிறேன்.
எத்தனை நாளைக்கு தான் கிரகத்தையே வைத்து சொல்லிக்கொண்டு இருப்பது கொஞ்சம் மாற்றி நட்சத்திரத்தை வைத்து சொன்னேன்.
தஞ்சாவூர் செல்லுகிறேன். நான் செல்லுவது நம்ம உழவன் மாட்டுவண்டி தான். முடிந்தால் இரயில் பயணங்களில் அனுபவத்தை எழுதுகிறேன்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment