Followers

Monday, June 16, 2014

சோதிட அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு ஜாதகத்தை நாம் பார்க்கலாம். இது உங்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை தரும் என்று நினைக்கிறேன். இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

இவரை அவரின் இல்லத்தில் சந்தித்தேன். மகரலக்கினத்தை லக்கினமாக கொண்டவர். லக்கினாதிபதி நான்காவது வீட்டில் அமர்ந்து இருக்கிறார். லக்கினாதிபதியோடு செவ்வாய் அமர்ந்து இருக்கிறார். லக்கினாதிபதி நீசமாகிவிட்டார். 

ராஜ கிரகங்கள் என்று சொல்லும் சனிக்கிரகம் நீசமாகிவிட்டார். அடுத்த கிரகம் குரு. குரு கிரகம் பத்தாவது வீட்டில் அமர்ந்து இருக்கிறார். பத்தாவது வீட்டில் இருந்து நான்காவது வீட்டை பார்க்கிறார். லக்கினாதிபதிக்கும் மற்றும் செவ்வாய்க்கும் பார்வையை செலுத்துகிறார். ஏழாவது பார்வையாக தான் பார்க்கிறார். அவரின் பார்வையில் அந்தளவுக்கு விஷேசம் இல்லை என்றாலும் ஏதோ பரவாயில்லை என்று சொல்லலாம்.

சுக்கிரனும் குருவும் பரிவர்த்தனை நடந்து இருக்கிறது. இந்த பரிவர்த்தனை நடந்தாலும் அதில் இருந்து அந்தளவுக்கு விஷேசம் இல்லை என்று சொல்லலாம். என்னுடைய அனுபவத்தில் சுக்கிரனும் குருவும் பரிவர்த்தனை நல்லது நடப்பதில்லை.

இவரைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால் இவருக்கு திருமணம் நடந்து இவரின் மனைவி இறந்துவிட்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவரும் இவரின் பெண் குழந்தையும் தனியாக இருந்து வாழ்ந்து வந்தார்கள். தற்பொழுது இவரின் பெண்ணிற்க்கு திருமணம் நடந்தது.

இவருக்கும் இவரின் மனைவிக்கும் காதல் திருமணம் நடைபெற்று இருக்கிறது. இவரின் மனைவி மீது மிகுந்த பாசம் வைத்து இருந்து இருக்கிறார். இவரின் மனைவி இவரை விட்டு சென்றவுடன் இவர் மிகுந்த துயரம் அடைந்து தனியாகவே வாழ்ந்து வந்து இருக்கிறார். 

மனைவி இறப்பது சகசம் தானே என்று நீங்கள் நினைக்கலாம். உண்மையில் ஒருவர் அளவுக்கு அதிகமாக அன்பு செலுத்திவிட்டால் அவரின் பிரிவு மிகப்பெரிய நரகவேதனையை கொடுத்துவிடும். மனிதன் தானே உடைந்துவிட்டார். அவரின் குழந்தைக்காக அவர் வாழ்ந்து இருக்கிறார். மனித வாழ்க்கை நிலையற்றது என்பதை அவரின் மனைவி இறந்தப்பொழுது மட்டுமே அந்த வார்த்தையின் அர்த்தத்தை புரிந்தார்.

தன் மகளுக்காக அடுத்த திருமணத்தை விரும்பவில்லை. தனியாகவே வாழ்ந்துவிட்டார். இந்த காலத்தில் மனிதர்கள் மனைவி இருக்கும்பொழுதே அடுத்து ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்கிறார்கள். இவரின் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் ,செவ்வாய் சொந்த வீட்டில் இருக்கிறது. இன்னும் பல விஷேச அமைப்பு இருக்கின்றது என்பதை சொல்லிக்கொண்டே போகலாம்.

நல்ல அமைப்பு இருந்தும் இவருக்கு வாழ்க்கை ஒரு வெறுப்பை தந்த காரணம் சுகஸ்தானம் என்று அழைக்கப்படும் நான்காவது வீடு கெட்ட காரணத்தால் இவரின் வாழ்க்கை மிகப்பெரிய சோகமாக அமைந்தது.

நான்காவது வீட்டில் செவ்வாய் அமர்ந்தால் அந்த ஜாதகரை ஒரு வழி செய்துவிடும். அந்த ஜாதகரின் வீட்டில் உள்ளவர்களை தனியாக பிரித்து அலங்கோலம் செய்துவிடும். பல ஜாதகங்களை நான் பார்த்து இருக்கிறேன்.

சொந்தக்காரர்கள் கூட இவரை தூக்கிவிட நினைக்கமாட்டார்கள். சொந்தக்காரர்கள் இவரை மதிக்ககூட இல்லை. சொந்தகாரர்கள் இவரை அவமானம் செய்தார்களே தவிர வேறு நன்மை செய்யவில்லை. அனைத்திற்க்கும் காரணம் செவ்வாய் கிரகம் மட்டுமே. 

செவ்வாய்க்கிரகம் சொந்த வீட்டில் அமர்ந்து கூட நல்லது செய்யவில்லை. அதனோடு சனி இருந்ததால் கூட நடந்து இருக்கலாம் என்று சொல்லலாம். குருவின் பார்வை கூட இருந்தும் செவ்வாய் கிரகம் இவரை விடவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

ஒரு சில ஜாதகங்களை இப்படி மட்டுமே பலனை அனுசரித்து சொல்லவேண்டும். அடுத்த கிரகத்தை வைத்து எல்லாம் சொல்லும்பொழுது கூட சுகஸ்தானம் எனப்படும் நான்காவது வீட்டை நன்றாக பார்த்து பலனை சொல்லவேண்டும்.



ஆன்மீக தகவல்

முருகனை கோவண கோலத்தில் வணங்கினால் உங்களுக்கு ஞானம் மட்டுமே வளரும். கோவணத்தில் இருக்கும் கோலத்தில் நீங்கள் வணங்கும்பொழுது மிகப்பெரிய ஞானியாக நீங்கள் மாறிவிடுவீர்கள். 

சோதிடத்தில் நான்காவது வீட்டில் செவ்வாய் அமரும்பொழுது  கோவணத்தில் இருப்பது போல் தான் இருப்பார். செவ்வாய் கிரகத்திற்க்கு சுப்பிரமணியரை தெய்வமாக வணங்குகிறோம்.

முருகனின் வாகனமான மயில், தன் காலடியில் நாக பாம்பை மிதித்துக்கொண்டிருப்பது, குண்டலினி சக்தியை அடக்கி ஆளக் கூடியவர் அவர் என்பதைக் குறிப்பதாகும். அவரது ஆறு முகங்கள் உடலுக்குள் உள்ள ஆறு குண்டலினி சக்கரங்களைக் குறிப்பவை. மலைச் சிகரத்தில் அவர் குடிகொண்டிருப்பது, யோகத்தின் உச்ச நிலையைக் குறிப்பது.

சுப்பிரமணியர் என்று அழைக்கப்படும் நிலை ஒரு ஆத்ம பயிற்சி செய்பவர் அடையகூடிய இறுதி நிலை என்றும் சொல்லுவார்கள். ஒருவர் அந்த நிலையை அடைந்துவிட்டால் அதன் பிறகு நிலைகள் கிடையாது என்பார்கள். அது தான் இறுதிநிலை என்பார்கள்.

இல்லறத்தில் இருப்பவர்கள் ராஜ அலங்காரத்தில் இருக்கும் முருகனை வணங்குங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

4 comments:

seethalrajan said...

வணக்கம்! இவர் ஜதகத்தில் 2ம் வீடு மிகவும் கெட்டு இருகிறது. 2ம் விட்டு அதிபதி சனி நிசம், அவர் வுடன் சேர்ந்து இருக்கும் செவ்வாய் நவம்சதில் நிசம், 2ம் விட்டில் 8ம் அதிபதி சூரியன், 6ம் அதிபதி புதன் குட ராகு வேர 2ம் விடு மிகவும் கெட்டு இருகிறது.

Unknown said...

இவருக்கு சனி பகவான் நீச பங்கம் அடைந்துள்ளார் ஆனால் செவ்வாய் பலம் குன்றி இருக்கிறது மேலும் செவ்வாய் ராகு சம்பந்தம் வேறு ராகுவின் 3 ஆம் பார்வை அதன் மேல் விழுகிறது ராகு கேடு விற்கு 3,7,11 பார்வை இருக்கிறது அண்டி கிலோக் விசே பார்வை. மேலும் குரு கேது சம்பந்தம் வேறு இருக்கிறது இரண்டாம் திருமணத்தை குறிக்கும் பதினோராம் அதிபதி (இவருக்கு செவ்வாய் ) மிகவும் வலுகுன்றிவிட்டது அதனால் இரண்டாம் திருமணம் இல்லை. குரு இந்த லக்னத்திற்கு அசுபர் , அசுபர் பார்வை பெற்ற நான்காம் வீடு மற்றும் லக்ன , பதினோராம் அதிபதி இதனால் இவருக்கு திருமணம் நடை பெறவில்லை இவருக்கு சந்திரன் சூரியன் சாரத்தை பெற்று இருக்கும் , சூரியன் ராகு ஒரு கிரகன தோஷத்தை ஏற்படுத்திவிட்டது என்னதான் பலன் சொனாலும் ஒரு மனிதன் நிலையில் இருந்து அனுபவிக்கும் பொது அவர் வேதனை நமக்கு புரியும் இவருக்கு மன அமைதி தர ஆண்டவனை வேண்டுவோம்

rajeshsubbu said...

வணக்கம் Seethalrajan தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

rajeshsubbu said...

வணக்கம் Ravi Madhavan தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.