வணக்கம் நண்பர்களே !
ஒரு நண்பர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டுருந்தார். அவரின் கேள்வி இது தான் உங்களின் பார்வையில் சில ஜாதகங்களை வைத்து ஆராய்ச்சி செய்து பதிவில் வெளியிடுங்கள் என்று கேட்டார்.
நண்பர் இந்த கேள்வி கேட்டவுடன் வேறு இடத்திற்க்கு செல்லவேண்டியதை தவறாக எனது மெயிலுக்கு அனுப்பிவிட்டாரோ என்று எனக்கு தோன்றியது. ஜாதகத்தை ஆராய்ச்சி செய்து வெளியிடும் அளவுக்கு இன்னும் அறிவு வளரவில்லை என்று நினைக்கிறேன். ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு என்னிடம் வாடிக்கையாளர்கள் வரவில்லை. இராசி கட்டத்தை வைத்தே பலனை சொல்லி அனுப்பிவிடுகிறேன்.
நீங்கள் தொழில்முறை சோதிடர்களாக மாறிவிட்டால் இப்படிப்பட்ட கேள்வி எல்லாம் கேட்கமாட்டீர்கள். அனைத்தையும் பார்த்து பலனை சொல்லுவதற்க்கு நமக்கு நேரம் இருக்காது.
நம்மிடம் வரும் வாடிக்கையாளர்க்கும் கேட்பதற்க்கு நேரம் இருக்காது. ஆராய்ச்சி செய்து பலனை சொல்லுவது எல்லாம் பெரிய சோதிடர்கள் செய்வார்கள். அவர்கள் சோதிட பாடங்களை வகுப்பு எடுத்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் மட்டும் தான் இப்படி செய்யமுடியும். என்னால் முடியாத காரியம்.
பொதுவாக இன்றைய சோதிடம் எல்லாம் புத்தகங்களில் படித்த படிப்பாக அதனை செய்துக்கொண்டிருக்கின்றார்கள். அது தவறான ஒன்று. அனுபவம் சேரவேண்டும். அனுபவத்தில் சோதிடப்பலனை சொல்லும்பொழுது நிறைய விசங்கள் நமக்கு புரியவரும்.
இன்று சோதிடப்பலனை சொல்லுகின்ற இடம் எல்லாம் மாறிவிட்டது. இயற்கையான சூழ்நிலையில் வைத்து சோதிடப்பாடத்தை நாம் சொல்லும்பொழுது துல்லியமான பலனை நாம் சொல்லலாம். இன்று ஏசி அறை வைத்து சோதிடத்தை சொல்லும்பொழுது நமது பலன்கள் தவறாக போய்விடுகிறது.
நீங்கள் ஒன்றும் செய்யவேண்டியதில்லை. ஒருத்தர் ஜாதகத்தை கொடுத்து இவர் எப்பொழுது மரணம் எய்துவார் என்று ஆராய்ச்சி செய்ய சொல்ல சொல்லுங்கள்.ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அப்பொழுது மரணம் எய்துவார். இப்பொழுது மரணம் எய்துவார் என்று பல விடைகளை சொல்லுவார்கள். நேரம் கிடைக்கும்பொழுது எழுதுகிறேன்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment