வணக்கம் நண்பர்களே!
நமது நண்பர்களிடம் மூலிகை எண்ணெய்யை பற்றி ஒரு பதிவில் சொல்லிருந்தேன். அதனை படித்துவிட்டு நமது நண்பர்கள் அனைவரும் அதனைப்பற்றி கேட்கிறார்கள்.
மூலிகை எண்ணெய் போல் லேகியத்தைப்பற்றி எனது தொழில் நண்பர்களிடம் சொல்லிருந்தேன். அதனை கேட்டு நமது நண்பர்கள் அதனையும் எனக்கு கொடுத்துவிடுங்கள் என்று கேட்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் ஏன் சித்தர்களை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது இப்பொழுது தான் எனக்கே தெரிந்தது. ஏதாவது லேகியம் அல்லது எண்ணெய் வைத்து அந்த மேட்டர் பிரச்சினையை தீர்க்கலாம் என்ற எண்ணம். முதலில் நீங்கள் நன்றாக சாப்பிடுங்கள் அந்த சாப்பாடு இயற்கையான முறையில் விளைந்த பொருட்களை கொண்டு இருக்கட்டும்.
மூலிகை எண்ணெய் சித்தர்கள் வழியில் தயாரிக்கும் முறை. லேகியம் யுனானி முறையில் தயாரிக்கும் முறை. நான் தினமும் மூன்று மணி நேரம் உடற்பயிற்சி செய்வது உண்டு. அதற்க்காக ஒரு சாமியார் எனக்கு கற்று தந்த விசயம் தான் மேற்கண்ட விசயம்.
எனது சுயதேவைக்காக தயாரித்த விசயத்தை உங்களிடம் சொன்னதில் இருந்து எனக்கு அன்பு தொல்லையை தருகிறார்கள். வியாபார எண்ணங்கள் கிடையாது ஆனால் அதனை தயாரிக்க ஆகும் செலவு மற்றும் நேரம் அதிகம். பார்க்கலாம் நேரம் இருக்கும்பொழுது அதனை செய்யலாம்.
மூலிகை எண்ணெய் சுக்கிரனுக்கு ஒரு சிறந்த பரிகாரம். லேகியம் ஆண்களுக்கு மட்டும் பதிவை விரும்பி படிக்கும் நபர்களுக்கு உரியது. உடலின் சக்திக்கு உரியது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment