வணக்கம் நண்பர்களே!
நான் காயத்ரி மந்திரப்பயிற்சி செய்யுங்கள். ஆன்மீகவாதிகளாக மாறுங்கள் என்று மாதம் மாதம் கத்துகத்து கத்தினாலும் ஒருவரும் அந்தளவுக்கு விருப்பம் காட்டமாட்டார்கள். கடந்த இரண்டு நாட்களாக நமது நண்பர்கள் போன் மேல் போனை போட்டு சார் மந்திரப்பயிற்சியை கற்றுக்கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இந்தியன் அடக்கப்பட்ட காமவெறியோடு இருக்கிறான் என்று சொன்ன சாமியார் பெரிய மகான் என்று இப்பொழுது தான் எனக்கு தெரிகிறது.
நம்ம ஆளங்களுக்கு சொல்லுகிற விதத்தில் சொன்னால் மட்டுமே அதனை விரும்பி ஏற்பார்கள். நமது மதத்தில் கொடுத்த விசயங்கள் அனைத்தும் நமது வாழ்க்கைக்கு வழிகாட்டுவதற்க்கு மட்டுமே உருவாக்கப்பட்டவை அதனை முதலில் நீங்கள் புரிந்துக்கொள்ளுங்கள்.
ஒரு சில ஆன்மீகவாதிகள் தங்களின் சுயநலத்திற்க்காக கூடுதலான சில விசயங்களை சொல்லி உங்களை திசைதிருப்பிவிட்டனர். உங்களை அப்படியே ஏற்றுக்கொண்டு உங்களுக்கு பயிற்சி கொடுத்து உங்களை உயர்த்துவது மட்டுமே நமது ஆன்மீகத்தின் நோக்கம். ஒரு சில கயவர்கள் உங்களை அடிமைப்படுத்தி உங்களிடம் இருந்து அனைத்தையும் பெற்றுக்கொண்டு அவர்கள் உல்லாசமாக இருக்க அது வேண்டாம் இது வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.
தன் உடலை கவனித்தாலே போதும் நீங்கள் ஆன்மீகத்தை தேடி வந்துவிடுவீர்கள். தன் உடலில் காமம் மட்டும் தான் இருக்கும். காமம் மட்டுமே உங்களின் உண்மையான இயல்பு. அதனை தவிர்க்க வேண்டும் என்றால் ஒரு மனிதனால் கண்டிப்பாக முடியாத விசயம். காமம் மட்டுமே இருக்கும் உடலை எப்படி தவிர்த்துவிட்டு ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடையமுடியும். மாறாக அதனை ஏற்றுக்கொண்டு அதில் இருந்து நீங்கள் ஆன்மீகத்தில் முன்னேற்றத்தை அடையலாம்.
காமத்தை தவிர்த்துவிட்டு ஆன்மீகத்தை அடையமுடியாது. காமத்தை ஏற்றுக்கொண்டு ஆன்மீகத்தை அடையலாம்.ஒன்றும் மட்டும் நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள். படிப்படியாக மட்டுமே அனைத்தையும் அடையமுடியும். உடனே அனைத்தையும் அடைந்துவிடலாம் என்றால் கண்டிப்பாக முடியாத விசயம். தொடர்ந்து பயிற்சி செய்து வரும்பொழுது நான் சொன்ன அனைத்து விசயமும் உங்களுக்குள் நடக்கும்.
மந்திரப்பயிற்சி என்று வந்துவிட்டு உடனே நடக்கவில்லை என்றால் நான் என்ன செய்வது. ஒரு குழந்தை உருவாவதற்க்கு பத்து மாதம் எடுக்கிறது. சாதாரணமாக இருக்கும் மனிதன் ஆன்மீகவாதியாக மாறுவதற்க்கு சில காலம் எடுக்கும். அந்த காலம் வரை நீங்கள் பொறுமையாக இருக்கவேண்டும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment