Followers

Monday, June 2, 2014

இல்லாதவனுக்கு இருப்பது மேல் ஆசை


வணக்கம் நண்பர்களே!
                     லக்கினாதிபதி எட்டாவது வீட்டில் இருந்தால் அந்த நபர்களுக்கு உடல் வலிமை குறைவாக இருக்கும். உடலில் ஏதாவது நோய் வந்துக்கொண்டே இருக்கும். அப்படி இருந்தும் அவர்கள் தன் உடல் மீது அதிகம் கவனம் செலுத்துவார்கள்.

யார் ஒருவர் உடல் மீது கவனம் செலுத்துகிறார்களோ அவர்கள் ஆன்மீகவாதியாக மாறிவிடுவார்கள். மிக பெரிய ஆன்மீகவாதிகள் அனைவருக்கும் லக்கினாதிபதி எட்டாவது வீட்டில் சென்று அமர்ந்திருப்பார்.உடல் மீது கவனம் செலுத்தியவுடன் ஆன்மீகத்தின் பக்கம் சென்றுவிடுவார்கள். மறைவு பொருட்களை காட்டும் இடமான எட்டாவது வீட்டில் லக்கினாதிபதி இருந்தால் அவர்கள் அதனைப்பற்றி ஆராய தொடங்கிவிடுவார்கள். 

இளமையில் நிறைய அவமானங்களை சந்தித்து இருப்பார்கள். அந்த அவமானமே இவர்களை செதுக்கி இருக்கும். அதே நேரத்தில் அலைந்துக்கொண்டி இருந்திருப்பார்கள். ஊரை எல்லாம் சுற்றும்பொழுது தானே இந்த உலகம் நிலையற்றது என்பது தெரியவரும்.

முப்பது வயதிற்க்கு மேல் ஆன்மீகப்பக்கம் வந்துவிடுவார்கள். சிறந்த ஆன்மீகவாதி அதாவது உச்சத்தை தொட்டவன் என்று சொல்லுவார்கள் அல்லவா அது இவர்களாக தான் இருப்பார்கள். அந்தளவுக்கு ஒரு ஈடுபாடு ஆன்மீகத்தில் இவர்களுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும்.

உங்களின் ஜாதகத்தில் லக்கினாதிபதி எட்டாவது வீட்டில் இருந்தால் நீங்கள் ஆன்மீகவாதிகள் என்று தெரிந்துக்கொண்டு நீங்கள் செயலில் இறங்கிவிடுங்கள். இது தான் உங்களுக்கு தொழில் மூச்சு எல்லாம் ஆன்மீகம் மட்டுமே.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.                   

No comments: