வணக்கம் நண்பர்களே!
தொழில் செய்பவர்களுக்கு ஆன்மீக உதவி செய்யும்பொழுது ஒரு சில நண்பர்கள் என்னிடம் கேட்பார்கள். ஏன் தொழில் செய்பவர்கள் உங்களிடம் வந்தால் உடனே எதனையும் செய்துக்கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள். படிப்படியாக தான் வளர்ச்சியை தருவேன் என்று சொல்லுகிறீர்களே அது ஏன் என்று சொல்லமுடியுமா
ஒரு தவறான நபருக்கு எதுவும் சென்றுவிடகூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருப்பது வழக்கம். அதே நேரத்தில் படிப்படியாக வளர்ச்சியை கொடுத்தால் மட்டுமே மனிதன் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருப்பான்.
எங்களைப்பொறுத்தவரை எந்த ஒரு காரியத்தையும் உடனே செய்வதற்க்கு குரு அவர்கள் அனுமதி கொடுப்பதில்லை. ஒரு மனிதன் எப்படி நடந்துக்கொள்கிறான் என்பதை பொறுத்து அவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று குரு சொல்லிவிடுவார்.
சும்மா இருப்பவனை கோபுரத்தில் தூக்கி உட்கார வைக்கும் வித்தை எங்களிடம் இருக்கின்றது. அதே நேரத்தில் கோபுரத்தில் இருப்பவனை கீழே தள்ளிவிடும் வேலையும் உண்டு.
ஒருவரின் ஜாதகத்தில் எதுவும் இல்லை என்றாலும் அவன் எதிர்பார்க்காத இடத்தில் கொண்டு சென்று வைக்கவும் முடியும். அனைத்தும் மிகச்சிறந்த வேலைகள் இருப்பதால் ஒவ்வொருவரையும் அதிகமாக கவனத்தில் எடுத்துக்கொண்டு தான் செய்துக்கொடுத்துக்கொண்டிருக்கிறோம். ஒழுங்காக நடந்துக்கொள்பவர்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சி கண்டிப்பாக உண்டு.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment