வணக்கம் நண்பர்களே!
உங்களிடம் ஏற்கனவே சொல்லிருக்கிறேன். வீட்டில் புதிய கணக்கை தொடங்குங்கள் என்று சொல்லிருக்கிறேன். நீங்கள் செய்துவரும் செலவுகளை எல்லாம் எழுதிவையுங்கள் என்று சொல்லிருக்கிறேன். வரும் வருமானத்தை வைத்து நீங்கள் செய்யும் செலவு சரிதானா என்று பாருங்கள் என்று சொல்லியுள்ளேன். எத்தனை பேர் இதனை செய்துள்ளீர்கள் என்று தெரியவில்லை.
என்னிடம் தொழில் செய்பவர்கள் வருகின்றார்கள். அவர்களிடம் சொல்லுவது முதலில் கணக்கை எழுதிவையுங்கள் என்று சொல்லுவது உண்டு. அவர்களிடம் கணக்கை பார்த்து எனது பணத்தை வாங்குவதற்க்கு அல்ல. ஒருவன் கணக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டால் அவன் முன்னேற்றப்பாதையில் தானாகவே சென்றுவிடுவான்.
ஒவ்வொரு மாதமும் உங்களின் செலவை எல்லாம் எழுதி வைத்துவிட்டு கடைசியில் அந்த கணக்கை பார்த்தால் அதில் தேவையில்லாமல் செய்யும் செலவுகளை பார்த்தால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். நாம் ஏன் இதுவரை முன்னேற்றம் அடையவில்லை என்று தெரியவரும்.
தொழில் அதிபர்களிடம் சொல்லுவது முதலில் உனது வீட்டை சரிப்படுத்து அடுத்தாக நீங்கள் தொழில் சாதிக்கலாம் என்று சொல்லுவேன். ஏன் என்றால் வீடு சரியில்லை என்றால் உலகவங்கியை உங்களிடம் கொடுத்தாலும் ஆறு மாதத்திற்க்கு பிறகு உலகவங்கி திவாலாகிவிடும்.
கஞ்சனாக இருக்கவேண்டும் என்பதில்லை. எங்கு பொருள் வாங்கவேண்டுமோ அங்கு நீங்கள் பொருட்களை வாங்கினால் போதும். அதே நேரத்தில் நீங்கள் விரும்பிய அனைத்து பொருட்களையும் பாதிவிலையில் வாங்கிவிடமுடியும். அனைத்தையும் அனுபவிக்கவேண்டும் அதே நேரத்தில் பணத்தையும் சேமிக்கவேண்டும்.
ஆன்மீகத்திற்க்கும் சரி எந்த விசயத்திலும் உங்களை கவனிக்க ஆரம்பித்துவிட்டால் நீங்கள் முன்னேற்றப்பாதையில் சென்றுவிடுவீர்கள். நீங்கள் விழிப்புணர்வை அடைந்துவிடுவீர்கள். பாதை தவறு என்று முதலில் பார்க்ககூடாது நீங்கள் செய்யும் செயலை உற்று கவனிக்க ஆரம்பித்துவிட்டால் நீங்கள் மகானாகிவிடுவீர்கள்.
நீங்கள் செய்யும் செயல் தவறாக அமைந்துவிடுகிறது அதனால் நீங்கள் நஷ்டபடுகின்றீர்கள். உலகத்தை நாம் குறைச்சொல்லாமல் உங்களை பார்த்தால் எந்த விலைவாசியாக இருந்தாலும் உங்களை பாதிக்காது. மிக குறைந்த காலத்தில் உங்களிடம் இருக்கும் பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் போய்விடும்.
அந்தளவுக்கு சேமிப்பாகிவிடும். உங்களின் உழைப்பை வீணடிக்காதீர்கள். இதனை படித்துவிட்டு இதுவரை கணக்கு எழுதாதவர்கள் உடனே கணக்கை தொடங்கிவிடுங்கள். ஒரு ஆன்மீகவாதி இதனை எல்லாம் உங்களிடம் சொல்லிக்கொண்டு இருக்கமாட்டார்கள். உங்களின் மீது அக்கறை இருப்பதால் சொல்லுகிறேன். கணக்கை எழுதி பாருங்கள். அப்பொழுது தெரியும் நான் சொல்லும் வார்த்தையில் உள்ள எதார்த்தம்.
நமக்கு தான் நமது அப்பா சேர்த்து வைக்கவில்லை நமது குழந்தைக்காவது சேர்த்து வைக்கவேண்டும் அல்லவா. நிறைய சேமியுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment