Followers

Sunday, June 1, 2014

சோதிட அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                    சோதிட அனுபத்தை பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. ஒரு அனுபத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். இவர் கோயம்புத்தூரில் வசித்துவருகிறார். இவரின் லக்கினாதிபதி மூன்றாவது வீட்டில் அமர்ந்திருக்கிறார். சுக்கிரன் லக்கினாதிபதியாக இருக்கிறார். லக்கினாதிபதிக்கு குருவின் பார்வை கிடைக்கிறது. 

குரு கிரகம் தன்னுடைய சொந்த வீட்டில் இருந்து லக்கினாதிபதியை பார்வை செய்கிறார். சுக்கிரனுக்கு குருவின் பார்வை படுவது அவ்வளவு நல்லதல்ல என்றாலும் அது ஒருவகையில் நல்லதை செய்யும் என்று எதிர்பார்க்கலாம். இவர் வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டார். 

தன்னுடைய சொந்த காலில் நின்று உழைத்து முன்னேற்றம் கண்டவர். இன்று நல்ல நிலையில் இருந்தாலும் இவரின் வாழ்க்கையில் ஒரு குறை உள்ளது அது என்ன என்றால் இவருக்கு திருமணம் நடைபெறவில்லை. 

திருமணத்தை காட்டும் கிரகமான செவ்வாய் கிரகம் பதினோராவது வீட்டில் சென்று அமர்ந்திருக்கிறது. அந்த கிரகம் நன்றாக இருந்தாலும் அந்த கிரகத்தால் திருமணம் நடைபெறும் என்று பார்த்தால் அதுவும் நடைபெறவில்லை.

செவ்வாயை விட்டுவிடுவோம் குருகிரகம் நன்றாக இருந்தால் திருமணம் நடைபெறும் என்று பார்த்தால் அதனாலும் திருமணம் நடைபெறவில்லை. இவ்வளவுக்கும் குருகிரகம் தன்னுடைய சொந்தவீட்டில் அமர்ந்து இருக்கிறது.

இவருக்கு திருமணம் நடைபெறாதவர்க்கு காரணம் இவரின் ஜாதகத்தில் பெரும்பாலும் கிரகங்கள் ஒரே பக்கம் அமர்ந்து இருந்து இவருக்கு சந்நியாசி யோகத்தை வழங்குகிறது. ராகு மட்டும் தனித்து நிற்கிறது. 

இது எந்த சோதிட புத்தகத்தில் இருக்கிறது என்று கேட்காதீர்கள் எனக்கு தெரியவில்லை நான் பார்த்த சில ஜாதகங்களின் ஜாதகர்களுக்கு இப்படி நடந்திருக்கிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Unknown said...

indraiku thaan indha padhivai padithen podhuvaaga rahu , ketu vuku 7 aam paarvai mattum thaan naam kanipathundu aanaal rahu, ketuvuku 3,7,11 paarvaigal undu andha kootrin padi raasiku sapthamaadipathiyaana sukiran mel ketuvin 11 aam paarvai vizhukirathu(rahu ketuvuku anti-clockwise paarvai) lagnathirku sapthamaadhipathiyana sevvaai ku ketuvin 3aam paarvai irukkirathu melum ivaruku sukkiran sani saarathil irukkum kaaranam rasi padiyum,lagna padiyum sani bagavaan baadagaathipathi , avarudaya saarathil kalathirakaaragan sukiran aadhanaal ivar sirandha bakthimaanaga irupaar, selvam irukkum, thayaala kunam irukkum idhu en kanipu.
Thanks
Ravi