Followers

Thursday, June 5, 2014

விரைய தசா பகுதி 20


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு என்னை வந்து ஒருத்தர் சந்தித்தார். அவருடைய ஜாதகத்தில் சூரியன் பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்து இருந்தது. அவருக்கு சூரியன் தசா ஆரம்பித்தது. முதலில் அவருடைய கட்டடத்தை சாலை விரிவாக்கம் செய்கிறேன் என்று இடித்துவிட்டார்கள்.

அரசாங்கம் வழியில் முதல் வழியில் பிரச்சினை வந்தது. எப்படி பார்த்தாலும் சாலை விரிவாக்கம் செய்யும்பொழுது அரசாங்கம் நிர்ணித்த தொகையை அவர்கள் தருவார்கள். இதில் அவருக்கு பாதி பணம் போய்விட்டது. 

சூரியன் இவருக்கு அடுத்த இலக்கை வைத்தது. இவரின் வீட்டிற்க்கு வருமானதுறை வழியில் வந்தது. இவருக்கு பெரிய அளவில் தொழில்கள் இருக்கின்றன.

வருமானத்துறை ரைடு நடத்தி இருக்கின்ற பணத்தை எல்லாம் வாரிக்கொண்டு சென்றுவிட்டது. சூரியன் இந்தளவுக்கு பிரச்சினை வைக்குமா என்று இவரின் ஜாதகத்தை பார்த்து தான் தெரிந்துக்கொண்டேன். சூரியனுக்கு உரிய  பரிகாரத்தை செய்தவுடன் இவருக்கு அரசாங்க வழியில் பிரச்சினை ஒய்ந்தது.

பிரச்சினை முடிந்தாலும் இவருக்கு அரசாங்க வழியில் நடக்கும் வேலைகள் நடைபெறாமல் இழுத்து அடித்தது. சூரியன் தசா முடிந்த பிறகு தான் அரசாங்கவழியில் வேலைகள் நடந்தன.ஒரு சிலருக்கு சூரியன் விரையத்தில் இருந்து தசாவை நடத்தினால் அவர்களுக்கு மரணமும் ஏற்படும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: