Followers

Monday, June 9, 2014

ஆன்மீக அனுபவங்கள் 167


வணக்கம் நண்பர்களே!
                     பெரும்பாலும் கோவிலுக்கு செல்வதில்லை ஆனால் முதல் முதலாக ஆன்மீகத்திற்க்கு வருபவர்களை நிறைய இடங்களுக்கு செல்ல சொல்வது உண்டு. நிறைய கோவில்கள் மற்றும் புண்ணியஸ்தலங்கள் சித்தர்களின் ஜீவசமாதி என்று செல்ல சொல்லுவேன்.

ஆன்மீக தேடுதல் தொடங்கிவுடன் உங்களின் ஆத்மாவிற்க்கு பல புண்ணிய ஆத்மாக்களின் ஆசி தேவைப்படும். புண்ணியஸ்தலங்கள் சென்றால் இதுவரை அங்கு எத்தனையோ ஆத்மாக்கள் அங்கு வந்து தரிசனம் செய்துவிட்டு சென்று இருப்பார்கள். அந்த இடத்திற்க்கு நாம் செல்லும்பொழுது அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும்.

காடுகளுக்கு சென்று வாருங்கள் அங்கு உள்ள நீர்வீழ்ச்சிகளில் குளித்துவிட்டு அங்கு கோவில்கள் இருந்தால் தரிசனம் செய்து விட்டு வாருங்கள் என்றும் சொல்லுவது உண்டு.

பெரிய காடுகளுக்குள் சென்றால் நமக்கு நிறைய அச்சம் ஏற்படும் நமது ஆணவம் குறையும். ஏன் என்றால் அங்குள்ள காடுகளில் உள்ள விலங்குகள் நம்மை தாக்கும் என்ற பயம் வரும்பொழுது நம்மை விட சக்தி வாய்ந்தை நிறைய உண்டு என்ற எண்ணம் வரும். சுத்தமாக ஆணவம் போய்விடும்

மலை ஏறும்பொழுது நமது உடலில் உள்ள தேவையற்றவை எல்லாம் வெளியேறிவிடும். நாம் கடைசியாக சென்று சாமி தரிசனம் செய்யும்பொழுது நமக்குள் மிகப்பெரிய அமைதி நிலவும்.

இந்தியாவில் உள்ள இயற்கையான சூழ்நிலையால் மட்டுமே இந்தியா ஆன்மீகத்திற்க்கு உகந்த நாடாக இருக்கிறதை தவிர இங்குள்ள ஆன்மீகவாதிகளால் இல்லை. இந்தியாவில் உள்ளவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்வதில்லை. வெளிநாட்டில் நீங்கள் சம்பாதிக்க செல்லலாம். அங்கேயே இருந்துவிடாமல் இப்படிப்பட்ட சூழ்நிலையை உள்ள நாட்டிற்க்கு சென்று நாமும் ஆன்மீக்பயிற்சி செய்யவேண்டும் என்று வந்து ஆன்மீகப்பயிற்சி செய்துக்கொள்ளுங்கள்.

எனக்கு மிகவும் பிடித்த ஒரு விசயம் என்றால் அது காடுகளுக்கு சென்றுவருது மட்டுமே. நான் நிறைய காடுகளுக்கு சென்றுவந்து இருக்கிறேன். அதனைப்பற்றி எழுதவேண்டும் என்றால் அதற்கே ஒரு புதிய பதிவினை தொடங்கவேண்டும். நீங்களும் ஒரு முறை காடுகளுக்கு சென்று வாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: